புகழ்பெற்ற உலகத் திரைப்படங்கள்

மனிதனின் எண்ணப் பரிமாற்றத்திற்குப் புத்தகங்களைப் போலவே திரைப்படமும் ஒரு முக்கிய சாதனம். ஒருவகையில் புத்தகங்களை விடவும் அதிக ஆற்றல் மிக்க ஒரு சாதனம் எனலாம். புத்தகங்களைக் கற்றவர்களே வாசிக்க முடியும் என்ற நிலையில், ஒரு திரைப்படத்தைக் கண்ணுள்ள எவரும் காண முடியும்தானே?

புத்தகங்களில் குப்பைகள் மலிந்துள்ளது போன்றே, திரைப்படங்களிலும் எண்ணற்றவை உள்ளன. எனவே அவற்றை இனம் கண்டு தேர்ந்தெடுப்பதன் வாயிலாகவே நாம் நமது ரசனையை மேம்படுத்திக்கொள்ள முடியும். சிறந்த உலகத் திரைப்படங்களை காண்பதன் மூலமாகவே ஒரு மேலான திரைப்படத்தைக் காணும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.

எனவே உலகத் திரைப்படங்களை பார்க்கும் முயற்சியின் தூண்டுதலாக இச்சிறிய நூலில் புகழ்பெற்ற பத்து திரைப்படங்களைக் குறித்த விமரிசனங்களை எழுதியுள்ளேன். பேசாத் திரைப்படங்கள் முதல் பேசும் திரைப்படங்கள் வரை முக்கியமான, அவசியம் காணவேண்டிய திரைப்படங்கள் இவை.

இவை அனைத்தும் எனது இணையப் பக்கத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்தவை. என் கட்டுரைகள் எனும் நூலில் இவைகள் இடம்பெற்றுள்ளன என்றபோதும், அனைவருக்கும் பயன்படும் வகையில், தனி நூலாகப் பிரசுரிக்கிறேன். இவற்றை வாசிக்கும் எவரும் சிறந்த உலகத் திரைப்படங்களைக் காணும் தூண்டுதலைப் பெறுவதோடு, தங்களின் கலை ரசனையை பிறிதொரு தளத்திற்கு எடுத்துச் சென்று, வாழ்க்கை மீதான தங்களது பார்வையில் விகாசம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
கேசவமணி
03.04.2018, திருப்பூர்.

புத்தகத்தை அமேசான் தளத்தில் வாங்கலாம்.

புகழ்பெற்ற உலகத் திரைப்படங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...