இதுவும் கடந்து போகும்

இதுவும்
இதுவும்
என எத்தனையோ
கடந்து போய்விட்டன

ஒவ்வொரு முறை
கடந்தபோதும்
பெற்றதும் இழந்ததும்
அநேகம் என்றாலும்

பெற்றவைகள் இழந்தவற்றுக்கோ
இழந்தவைகள் பெற்றவற்றுக்கோ
ஈடாகாது எனினும்

பெற்றவகைளும்
இழந்தவைகளும்
ஏதோ ஒரு வகையில்
சமனப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன.

(தோன்றியது: 16.01.2018. இறுதி வடிவம் எட்டியது: 19.01.2018)

Related Posts Plugin for WordPress, Blogger...