சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள்!

வேலை, உடல்நிலை, கடமை மூன்றும் தொடர்ச்சியாக வாசிப்பையும் எழுத்தையும் பாதித்து வருகின்றன. இம்மூன்றினாலும் பாதிக்கப்படாத எழுத்தும் வாசிப்பும் அடுத்த ஜன்மத்திலாவது லபிக்கவேண்டும். வாசிப்பும் எழுத்தும் குறையக் குறைய மனம் தூர்ந்துபோய்விட்டதோ என்ற அச்சம் மேலோங்குகிறது. எனவே மீண்டும் எதையாவது பற்றிப் பிடிக்க வேண்டும். இத்தகைய சிக்கலான சூழ்நிலையில்தான் புத்தகக் கண்காட்சிகளின் அவசியம் புரிபடும் என்று தோன்றுகிறது.

நாளைய தினம் சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. 2017-ல் தொடங்கிய கண்காட்சி முதல் அந்த வருடம் முழுவதுமே புத்தகங்கள் எதிர்பார்த்தபடி விற்பனையாகவில்லை என்ற அதிருப்தி அனைத்துப் பதிப்பாளர்களிடமும் நிரம்பியுள்ளது. இந்நிலையில் 2018-ம் வருடத்தின் சென்னை புத்தகத் திருவிழா நாளை தொடங்கவுள்ளது. இதில் பதிப்பாளர்கள் தாங்கள் எதிர்நோக்கிய இலக்கினை எட்டுவார்களா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

புத்தகங்கள் என்றில்லை அனைத்துமே மந்தகதியில்தான் உள்ளன என்ற ஆதங்கம் வணிகர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. நுகர்வோர்கள் எங்கு சென்றார்கள் என்று அனைத்துத் தரப்பினரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்! வணிகம் என்றில்லை அனைத்திலுமே இத்தகைய தேக்கநிலை அவ்வப்போது நிகழ்வது இயல்புதான் எனினும் அந்த நிலை நாளை தொடங்கும் கண்காட்சியில் இல்லாமலாக வேண்டும் என்பதே இப்போது அனைத்துப் பதிப்பாளர்களின் மனநிலையாக இருக்கிறது.

முக்கிய தமிழ் நாவல்கள் சில குறிப்புகள், முக்கிய தமிழ்ச் சிறுகதைகள் ஒரு பார்வை, ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும் என்ற எனது மூன்று புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் கடை எண் 599, 600-ல் மகேஸ்வரி புத்தகக் கடையில் கிடைக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...