பன்னிரு படைக்களமும் சொல்வளர்காடும் கிடைத்தது!

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசிப்பதற்கென்று நான் வாங்கிய புத்தகங்கள் பன்னிரு படைக்களமும் சொல்வளர்காடும். ஏற்கனவே உள்ள காண்டீபமும் வெய்யோனும் இன்னும் வாசிக்கத் தொடங்காத நிலையில் மேலும் இரு நூல்கள் சேர்ந்துவிட்டன. மகாபாரதம் எழுதத் தொடங்கிவிட்ட நிலையில் பிற நூல்களை வாசிப்பது இயலாது என்றாலும் கூட முயற்சிக்கலாமே என்ற நப்பாசைதான்.

பன்னிரு படைக்களம் படங்களின்றியும், சொல்வளர்காடு படங்களோடும் இருக்கின்றன. இந்திர நீலம், காண்டீபம், வெய்யோன் போன்று கச்சிதமான வடிவில் இல்லாமையால் புத்தகங்களைக் கையில் எடுத்ததும் ஒரு “காம்பேக்ட்னஸ்” இல்லாது போகிறது.

பன்னிரு படைக்களத்தின் அச்சு, மையின் போதாமையாலோ என்னவோ எழுத்துக்கள் அத்துனை மேலோட்டமாக இருக்கின்றன. வயதானவர்கள் எழுத்துக்கள் இருக்கின்றனவா அல்லது இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு இருப்பது ஏனோ?

கிழக்கு இன்னும் சில பல விசயங்களில் முற்றிலும் கவனம் செலுத்தாமலிருப்பது வருத்தம் தருகிறது. வேறு வழியில்லை, ஜெயமோகனுக்காக, மகாபாரதத்திற்காக வாங்கவேண்டியுள்ளது! இவை பெரிய குறைகளாக இல்லாமலிருக்கலாம் ஆனால் ஒரு செம்பதிப்பில் இவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்பதே என்னுடைய ஆதங்கம்.

இனி காண்டீபத்தைக் கையில் ஏந்தி வெய்யோனை வென்று பன்னிரு படைக்களத்தைக் கைப்பற்றிச் சொல்வளர்காட்டை அடையவேண்டும். பயணம் மேற்கொள்ளக் காத்திருக்கிறேன். எப்போது ரதத்தில் ஏறுவது என்பதுதான் கேள்வி.

Related Posts Plugin for WordPress, Blogger...