மகாபாரதக் கதைகள் (தொடர்)

படிப்பதும் எழுதுவதும் நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலை தருகிறது. புத்தகங்கள் விற்பது, புத்தகங்கள் பதிப்பது என்பதாக கவனம் முற்றாக திரும்பிவிட்டதால் வாசிப்பும் எழுத்தும் நின்றுவிட்டது. நானும் எப்படியாவது அதை சமன் செய்து விடலாம் என்று கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறேன். ஆனால் பலனில்லை.

இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு!

என்ன எப்படி என்ற திட்டம் ஏதுமில்லை என்னிடத்தில்! இன்று காலையில் செய்தித்தாள் வாசிக்கையில் எதேச்சையாக தோன்றிய எண்ணம்தான் இது! வாசிப்பையும் எழுத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இம் முயற்சியில் இறங்க சித்தமாயுள்ளேன். மகாபாரதக் கதையில் உள்ள எண்ணற்ற கிளைக் கதைகளை என் பாணியில் திரும்ப எழுதுவதே இத்தொடரின் நோக்கம்.

திருக்குறளைப் பற்றி ஓர் விரிவான தொடர் எழுத முன்பு திட்டமிருந்தது. அதைச் செய்ய அவ்வப்போது ஏதாவது யோசித்துக்கொண்டிருந்த வேளையில் இன்று திடீரென்று மகாபாரதம் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

இதை எவ்வளவு தூரம் வெற்றிகரமாகச் செய்யப்போகிறேன் என்பது தெரியவில்லை. ஆக தயக்கத்துடனே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...