உ.வே.சாவின் என் சரித்திரத்திற்கு ஒரு செம்பதிப்பு

இரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்பதிவு செய்திருந்த காலச்சுவடு பதிப்பகத்தின் என் சரித்திரம் புத்தகம் இன்று கிடைத்தது. அசரவைக்கும் கெட்டிஅட்டையில், ராயல் வடிவத்தில், ஆயிரம் பக்கங்களுடைய இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்ததும ்பரவசம் ஏற்பட்டது. நான் எதிர்பார்த்ததற்கு மேலேயே சிறப்பாக இப்புத்தகத்தைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நூலுக்கு இப்படியான ஒரு பதிப்பு வந்ததில்லை.

ஆனந்த விகடனில் உ.வே.சா. இத்தொடரை எழுதும்போது தொடரை நிறைவு செய்யாமலேயே மறைந்துவிட்டார். எனவே அவரது மீதி வாழ்வையும் பணியையும் விவரிக்கும் விதமாக கி.வா.ஜ. எழுதிய ஐயரவர்களின் பிற்பகுதி வாழ்க்கை இந்நூலில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

புத்தகம் நெடுகவே இடம்பெற்றிருக்கும் எண்ணற்ற புகைப்படங்கள் புத்தகத்திற்குச் செழுமை ஊட்டுகிறது. ஒவ்வொரு இலக்கிய ஆர்வலர்களும் அவசியம் தங்களது புத்தக அலமாரியில் வைத்திருக்க வேண்டிய ஒப்பற்ற பொக்கிஷம் இது.

தரமான தாளில் நேர்த்தியான அச்சாக்கத்தில் கையில ்தவழும் இந்நூலைக் காண்கையில் மீண்டும் வாசிக்க ஆசை எழுகிறது. உ.வே.சா. மட்டும் இல்லையென்றால் நமக்கு சிலப்பதிகாரம் ஏது? சீவகசிந்தாமணி ஏது? அவசியம் வாசிக்கவேண்டிய ஒரு சுயசரித நூல் உண்டெனில் அது உ.வே.சாவின் என் சரித்திரம் தவிர வேறொன்றாக இருக்கமுடியாது.

Related Posts Plugin for WordPress, Blogger...