தாகூரும் கீதாஞ்சலியும்

பின்வரும் பகுதி ஓஷோவின் உரையிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது:

ஒரு படைப்பாளி தான் என்ன படைத்தானோ அதனோடு மட்டுமே திருப்தியடைந்து விடுகிறவன் அல்ல. அவனுள் எப்போதும் தான் படைத்தவற்றின் மீதான அதிருப்தி இருந்துகொண்டே இருக்கிறது. அவன் மேலும் மேலும் அழகானவற்றை படைக்கலாமெனினும் எதுவுமே அவனை திருப்தியடைச் செய்வதில்லை. தான் இன்னும் அதிகம் கொடுத்திருக்க வேண்டும் என்றே அவன் நினைப்பான். தன்னுடைய படைப்பு அனைத்துமே இலக்கை அடையாமல் எட்டி நிற்பதை அவன் அறிவான். அவனுடைய இலக்கு எப்போதும் தூரத்திலேயே இருக்கிறது.

இது தாகூருக்கு மட்டும் உரியதல்ல, இந்த உலகத்தின் எந்த மூலையிலும், எக்காலத்திலும் வாழும் படைப்பாளிகள் அனைவருக்கும் பொதுவானது. இங்கிலாந்தின் பெரும் கவிஞரான கூல்ரிஜ் நாற்பதாயிரம் கவிதைகளை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு இறந்துபோனார். “அந்தக் கவிதைகளை முடிப்பதற்கு மேலும் இரண்டு வரிகளே போதுமானவை. நீங்கள் ஏன் அவற்றை முடிக்கவில்லை? எவ்வளவு அற்புதமான கவிதைகள் அவை” என்று அவருடைய வாழ்நாள் முழுதும் அவரிடம் கேட்கப்பட்டது.

“என்னுடைய இதயத்தில் சிறகடிக்கும் அவற்றை வார்த்தைகளாக வடிக்கும்போது அது அப்படியாக அமையவில்லை. மற்றவர்களுக்கு அவைகள் அழகானவையாகத் தோன்றலாம் ஏனெனில் அவற்றை ஒப்பிட்டு நோக்க அவர்களிடத்தில் வேறொன்றுமில்லை. எனக்கோ… என்னுடைய உள்ளத்தில் உறைந்திருக்கும் உண்மையான கவிதையை நான் மட்டுமே அறிவேன். இப்போதும் அதற்கான புதிய வார்த்தைகளை இன்னும் தேடியபடி இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

தாகூர் தன்னுடைய கவிதைகளைப் பலமுறை திரும்பத்திரும்ப எழுதுவார். அவருடைய தந்தை புத்திசாலி ஆனால் மேதை அல்ல. அவருடைய பாட்டனாரும் புத்திசாலிதான் ஆனால் அவரும்கூட மேதை அல்ல. “உனக்கென்ன பைத்தியமா? எல்லாவற்றையும் அழிக்கிறாய்… நீ அழகான கவிதைகளை உருவாக்குகிறாய் பிறகு அவை அனைத்தையும் அழிக்கிறாய். ஏன் அப்படிச் செய்கிறாய்?” எனக்கேட்டு இருவருமே தாகூரை திருப்திப்படுத்த முயல்வார்கள்.

அப்போது தாகூர், “ஏனெனில் அவைகள் என்னுடைய அனுபவத்தின் உண்மையான வெளிப்பாடாக இருக்கவில்லை. நான் ஒன்றைச் செய்ய விரும்பினேன் ஆனால் அது வேறொன்றாக ஆகிவிட்டது. உங்களுக்கு அவைகள் அழகானவையாகத் தோன்றலாம் ஆனால் எனக்கு அவைகள் என்னுடைய தோல்விகளே. எனக்குப் பின்னால் நான் தோல்விகளை விட்டுச்செல்ல விரும்பவில்லை என்பதாலேயே அவற்றை அழிக்கிறேன்” என்று அவர்களுக்கு பதில் சொல்வார்.

தாகூரின் தந்தை, “அவன் அழகான பல கவிதைகளை அழித்துவிட்டான்… அவைகள் எவ்வளவு அழகானவை என்பதைச் சொல்லியும் அவனை திருப்திப்படுத்த முடியவில்லை. அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போலத் தெரிகிறது” என்று எழுதுகிறார். கவிதை எழுதும்போது தாகூர் கதவுகளை மூடிக்கொள்வார். எந்த ஒரு காரணத்திற்காகவும் – உணவுக்காக கூட - தன்னை இடையூறு செய்வதை அனுமதிக்க மாட்டார். சில சமயங்களில் இரண்டு மூன்று நாட்கள்கூட ஆகிவிடும். குடும்பத்தார் அனைவரும் இதனால் கவலைப்படுவார்கள். அவரோ எழுதிஎழுதி அழித்துக்கொண்டிருப்பார். தன்னுடைய உள்ளொளியைச் சரியாக பிரதிபலிக்கும் வார்த்தைகளைக் கண்டுகொண்ட பிறகே கதவைத் திறப்பார்.

கீதாஞ்சலி என்பது ‘கவிதைகளின் அஞ்சலி’ - கடவுளுக்கு கவிதைகளால் செய்யும் அஞ்சலி. “என்னிடம் வேறெதுவும் இல்லை. என்னுடைய ஆழ்ந்த இதயபூர்வமான கனவுகளையே கவிதைகளாக்கி கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லும் அவர் அதற்காகவே ‘கீதாஞ்சலி’ என்ற பெயரைச் சூட்டியதாகச் சொல்கிறார். அவரால் அழிக்கப்படாமல் எஞ்சிய சில கவிதைகள்தான் இந்த கீதாஞ்சலி. இவைகள் மிகவும் அழகானவை. ஆனால் தாகூர் இந்தக் கவிதைகளால்கூட திருப்தி அடைந்துவிடவில்லை என்றாலும் இதற்காக அவர் நோபல் பரிசு பெற்றார்.

கீதாஞ்சலி வங்கமொழியில் எழுதப்பட்டது. வங்காளி ஒரு கவித்துவமான மொழி – அது பூனாவில் பேசப்படும் மராத்திக்கு எதிரானது. இரண்டு அல்லது மூன்று மகாராஷ்டிரர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டால், அவர்கள் ஏதோ சண்டை போட்டுக்கொள்வது போலத் தெரியும். அதன் வார்த்தைகள் அவ்வளவு கடுமையானவை – அது வேறெதையும் விடவும் சண்டை போட்டுக்கொள்வதற்கு பொருத்தமானது. ஆனால் வங்காளி அதற்கு நேரெதிரானது. இரண்டு வங்காளியர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் கூட நீங்கள் அதை இனிமையான உரையாடல் என்றே எண்ணிக் கொள்வீர்கள். வங்காள மொழியின் உரைநடை கூட கவிதையாக ஒலிக்கும். அதனுடைய இசைத்தன்மை வேறெந்த இந்திய மொழிகளுக்கும் கிடையாது.

தாகூர் வங்காளத்தில் முதன் முதலில் எழுதிய கீதாஞ்சலி பத்து வருடங்களாக வெளி உலகிற்கு தெரியவே இல்லை. “இதை ஏன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யக்கூடாது?” என்று நண்பர் ஒருவர் யதேச்சையாகக் கேட்க தாகூர் அதற்காக முயன்றார். அவர் ஏற்கனவே வங்கமொழியில் எழுதியதின் மீது கொண்டிருந்த அதிருப்தி இந்த மொழியாக்கத்தில் மேலும் அதிகமானது. ஒவ்வொரு மொழியும் தனக்கென பிரத்யேகமாக கொண்டிருக்கும் மொழி அமைப்பை இன்னொரு மொழியில் கொண்டுவர முடியாது. குறிப்பாக வங்காளத்திலுள்ள சொற்களை வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வது முடியாதது. நீங்கள் மொழிபெயர்க்கலாம் ஆனால் அதனுடைய இனிமையை, இசைத்தன்மையை கொண்டுவர முடியாது.

தாகூர் கீதாஞ்சலிக்காக நோபல் பரிசு பெற்றார். அவருடைய நண்பர், “இப்போது திருப்திதானே?” என்று கேட்டார். அதற்கு தாகூர், “நான் முன்பைவிட இப்போது அதிகமாக அதிருப்தி அடைந்துள்ளேன். கவிதையைப் புரிந்து கொள்வதில் மனிதர்களுக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இவைகள் என்னுடைய தோல்விகள். என்னுடைய இடைவிடாத முயற்சிக்குப் பிறகு ஓரளவு இவற்றை காப்பாற்றியுள்ளேன். நான் முற்றிலுமாகச் சோர்வடைந்துவிட்டேன், என்னுடைய இதயத்தில் உள்ளதை வார்த்தைகளாக்க முடியவில்லை என்பதை உணர்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்றிருக்கிறேன் என்றாலும் என்னுடைய பார்வையில் இது ஒரு தோல்வியே. இது மற்றவர்களை ஏமாற்றியிருக்காலம் ஆனால் என்னை ஏமாற்ற முடியாது” என்றார்.

மேற்கண்ட ஓஷோவின் சொற்கள் வழியாக கீதாஞ்சலியின் மகத்துவம் நமக்குத் தெரியவருகிறது. கவிதை என்பது எப்போதும் அறிவின் தளத்தில் அல்லாமல் உணர்வின் தளத்தில் நம்மை பாதிக்கவேண்டும். அந்த வகையில் தாகூரின் கீதாஞ்சலி நூற்றுக்குநூறு பொருந்துகிறது. இந்தக் கவிதைகளை நாம் நம்முடைய அறிவினால் இல்லாமல் நம்முடைய உணர்வுகளால் நெருங்கி அறியவேண்டியது அவசியம். இவைகள் நமது மூளையை அல்லாமல் ஆன்மாவைத் தீண்டும் அற்புத கவிதைகள்.

கீதாஞ்சலியில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை இங்கே தந்திருக்கிறேன். அவைகள் தாகூரால் மொழியாக்கம் செய்யப்பட்டவை அல்ல. வில்லியம் ராடைஸ் என்பவரால் வங்காளத்திலிருந்து நேரடியாக ஆங்கில மொழியாக்கம் பெற்ற கவிதைகள் இவை. சமீபத்தில் நான் படித்த குறிப்பிடத்தக்க புத்தகம் இது. முதல் வாசிப்பிலேயே என்னைக் கவர்ந்த கவிதைகள் இவை. இவற்றையும் தமிழாக்க முயற்சித்து, அவற்றின் அழகு சிதைவதைக் கண்டு அம்முயற்சியைக் கைவிட்டேன். அப்படியே ஆங்கிலத்தில் படிப்பது உசிதமானது. கவிதைகளுக்கு தலைப்பு ஏதும் கிடையாது என்றாலும் நான் வசதியின் பொருட்டு கவிதையின் முதல் வரியை தலைப்பாக்கி உள்ளேன்.

1. I love to watch the road:

I love to watch the road
I love to watch the road
Sunshine and shadows play,
    rain comes
        and the spring
I love to watch the road
I love to watch the road

People pass to and fro
   bringing news
People pass to and fro
   bringing news
I’m happy to live in my thoughts
    when the breeze cools,
       cools me gently
I love to watch the road
I love to watch the road

All day with wide open eyes
   I’ll sit at my door alone
If the time comes for you to be suddenly here,
I’ll see you
All day with wide open eyes
   I’ll sit at my door alone
If the time comes for you to be suddenly here,
I’ll see you

Meanwhile. Sometimes,
   I’ll inwardly laugh and sing
Meanwhile. Sometimes,
   I’ll inwardly laugh and sing
While a scent on the breeze floats,
   floats past me
       softly
I love to watch the road
I love to watch the road
Sunshine and shadows play,
    rain comes
        and the spring
I love to watch the road
I love to watch the road

2. You’ve made me limitless:

You’ve made me limitless,
   it amuses you so to do
You exhaust me, then fill me up again with new life
You’ve made me limitless,
   it amuses you so to do

You’ve roamed so many mountains and riverbanks
   with this little flute
You’ve roamed so many mountains and riverbanks
   with this little flute
You’ve played so many flourishes, round and round again
Whom shall I tell how many?
You’ve made me limitless,
   it amuses you so to do

At the nectar-touch of yours
   my heart has lost its edges
   and with that vast ecstasy
       words gush out
At the nectar-touch of yours
   my heart has lost its edges
   and with that vast ecstasy
       words gush out

You fill my single cupped hand
     with gifts day and night
You fill my single cupped hand
     with gifts day and night
Never used up, however ages run
Always more for me to take
You’ve made me limitless,
   it amuses you so to do
You exhaust me, then fill me up again with new life
You’ve made me limitless,
   it amuses you so to do

3. My boat must be sailed now:

My boat must be sailed now
It’s getting too late to wait on the shore
Alas
My boat must be sailed

The blossom is over,
   spring has gone
Tell me, what am I doing
   with this basket of wilting flowers?
Alas
My boat must be sailed

The water is rising, swelling,
   waves heave
Dry leaves patter to the ground
   round desolate trees
The water is rising, swelling,
   waves heave
Dry leaves patter to the ground
   round desolate trees

Where oh where to look
   with blankness of mind?
All air, all sky shudders
   with that flute song over the water
Alas
My boat must be sailed now
It’s getting too late to wait on the shore
Alas
My boat must be sailed

4. He came and sat beside me:

He came and sat beside me
   but I didn’t wake
He came and sat beside me
What sleep was it that held me
   So unluckily?
He came and sat beside me
   but I didn’t wake
He came and sat beside me

He came in the silent night,
   veena in hand
He came in the silent night,
   veena in hand
A solemn ragini
   played in my dreams
He came and sat beside me
   but I didn’t wake
He came and sat beside me

I rise and watch the southern breeze
                go mad
The hovering scent of his body
   floods the dark
I rise and watch the southern breeze
                go mad
The hovering scent of his body
   floods the dark

Why does my night pass by
   with him so near yet not near?
Why does my night pass by
   with him so near yet not near?
Why did the touch of his garland
   not brush my neck?
He came and sat beside me
   but I didn’t wake
He came and sat beside me

Related Posts Plugin for WordPress, Blogger...