வெண்முகில் நகரம் கிடைத்தது!

ஜெயமோகனின் வெண்முரசு வரிசையில் ஆறாவது நூலான ‘வெண்முகில் நகரம்’ இன்று கிடைக்கப் பெற்றேன். முதற்கனலில் தகித்து, மழைப்பாடலில் நனைந்து, வண்ணக்கடலில் நீந்தி, நீலத்தில் மூழ்கி, பிராகையில் நீராடி வெண்முகில் நகரத்தின் வாயிலில் நிற்கிறேன். பிரயாகையும், நீலமும், வண்ணக்கடலும், மழைப்பாடலும், முதற்கனலும் முன்னும் பின்னுமாக என் நினைவுகளில் முட்டி மோதி, கனவா நிஜமா என்று அறிய முடியாதபடி, வந்துவந்து போகின்றன. வெண்முகில் நகரத்தின் வாசல் எனக்காகத் திறந்து என்னை ‘வா வா’ என்றழைக்கிறது. அதில் பிரவேசிக்கும் தருணத்திற்காய் காத்திருக்கிறேன்.

வெண்முகில் நகரம் படங்கள் இல்லாத காரணத்தால் தடிமனும் கணமும் கணிசமாகக் குறைந்து, கையாள்வதற்கு சற்றே எளிதாக இருக்கிறது. காகிதங்கள் பழுப்பு நிறத்திற்கு மாறாக வெள்ளை வண்ணத்தில் இருப்பதால், புத்தகம் பிரகாசிக்கிறது. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, கற்பனையில் லயித்தவனாய், அது மேசையின் மீது வீற்றிருக்கும் அழகைப் பார்த்து ரசித்தபடி இருக்கிறேன். ‘எப்போது எப்போது’ என்று கண்காட்டி நிற்கிறது அது! ‘விரைவில்’ என்று ரகசியமாய் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். ஆனால் அது எப்போது என்று நானும் அறியேன்! ‘கூடும்போது கூடும்’ என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

வெண்முரசு நூல் வரிசைக்கு இதுவரை நான் எழுதியவை:

முதற்கனல்:
1. கனவுப் புத்தகம்

மழைப்பாடல்:
1. மழை இசையும் மழை ஓவியமும்
2. இடியும் மின்னலும்
3. கண்ணீர் மழை
4. பிறவிப் பெருமழை

வண்ணக்கடல்:
1. தீராப் பகை
2. துரோணரின் அகப் போராட்டம்
3. மூன்று துருவங்கள்
4. மகாபாரத மனிதர்கள்

நீலம்:
1. மனம் மயக்கும் நீலம்
2. மனமொழியும் கவிமொழியும்
3. பெயரழிந்து நிற்றல்
4. பித்தின் உச்சநிலை

பிரயாகை:
1. விருப்பும் வெறுப்பும்!
2. முதல் விரிசல்!
3. உணர்ச்சிகளின் மோதல்!
4. வஞ்சத்தின் பின்னல்கள்!
5. கல்லில் செதுக்கிய ஓவியம்!
6. அகத்தின் திறப்பு!

Related Posts Plugin for WordPress, Blogger...