அஞ்சலி: அப்துல் கலாம்

அப்துல் கலாம். இந்தப் பெயரை முதன் முதலாக அறிந்தபோது எனக்கு அந்தப் பெயர் மீது சொல்லமுடியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அவரின் அக்கினிச் சிறகுகள் அது வெளியான காலத்தில் படித்தபோது, அதன் ஒரு கட்டத்தில் நான் பெரிதும் மனத் தூண்டுதல் அடைந்தேன். அது ஏற்படுத்திய தாக்கம் இன்றும் என்னைத் தொடர்ந்து வருகிறது. என்னை வெகுவாக பாதித்த புத்தகங்களில் அக்கினிச் சிறகுகளும் ஒன்று. விஞ்ஞானி, ஜனாதிபதி என்பதையெல்லாம் தாண்டி அவர் ஒரு ஆன்மிகவாதி என்பதையும், மிகச்சிறந்த மனிதர் என்பதையும் அக்கினிச் சிறகுகள் எனக்கு உணர்த்திற்று. ஜனாதிபதியாகவும் அதற்குப் பிறகுமான அவரது வாழ்க்கையின் சுவடுகள் அவரை மாபெரும்மனிதராக என் நெஞ்சில் நிலைநிறுத்தியது. பறவையின் சிறகுகள் போன்று அமைந்த அவரது சிகை அவரது வாழ்க்கையைப் போன்றே யாரிடமும் காணமுடியாதது. அக்கினிச் சிறகுகள் நூலில், என்னால் என்றென்றும் மறக்கமுடியாத, அவரது வரிகள் இவை:

“இந்தக் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்குப்படி எனக்கு எந்த பரம்பரைச் சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டி வைக்கவில்லை. என்னிடம் எதுவுமே கிடையாது. குடும்பம், மகன்கள், மகள்கள் யாருமே எனக்குக் கிடையாது.”

Related Posts Plugin for WordPress, Blogger...