மகாபாரதம்


வியாசரின் பாரதத்தை ஒட்டி வந்த நூல்கள் அனைத்துமே ஓரளவுக்கே விரிவானவை. மகாபாரதம் கும்பகோணப் பதிப்பு ஒன்பது தொகுதிகள் கொண்ட முழுமையான பதிப்பு என்றாலும் அதன் நடையும் மொழியும் நூற்றாண்டுகள் கடந்தவை. அது அனைவரும் வாசிக்க உகந்ததல்ல. ஜெயமோகன் எழுதுகிறார் என்றாலும் அது வியாச பாரதமல்ல. அது நவீன நாவல் வகையைச் சார்ந்தது. இணையத்தில் அருட்செல்வப்பேரரசன், கிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் எழுதிய மகாபாரதத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறார். வியாசரின் பாரதத்தை அப்படியே வாசிப்பதென்பது அனைவராலும் முடியக்கூடியதல்ல. எனவே வியாச பாரதத்தை முழுமையாக ஆனால் வாசிக்கத்தக்கதாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலேயே நான் எழுதத்தொடங்கியிருக்கிறேன்.