என்னைப் பற்றிபுத்தகங்களை வாசிப்பதும் நேசிப்பதும் எனது மூச்சு. இலக்கியத்தின் மீது தீரா காதல். கல்லூரி நாட்களில் கதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அப்போது, எங்கள் ஊர் நூலகத்தில் ‘அக்கினிக் குஞ்சு’ என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்திய அனுபவமும் உண்டு. என்னிடம் சுமார் ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அரிய புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது எனது அவா.

1990. கல்லூரி படிப்பை முடித்த தருணம். அப்போதுதான் சுந்தர ராமசாமி அவர்களின் ஜே.ஜே.சில குறிப்புகள் படித்து உத்வேகத்தில் இருந்த காலமிது. இனி செய்ய ஏதும் இல்லை என்ற ஸ்தம்பிதம் ஏற்பட்டது. உலகத்தில், எல்லாமே அபத்தமாக தெரிந்த நேரம் அப்போது. நானும் நண்பர் பசுபதியும் ‘எதாவது செய்ய வேண்டும்’ என்ற ஆவேசத்தில் இருந்தோம். என்ன செய்யவேண்டும் என்று புரியாமல், புத்தகம் ஒன்று வெளியிட தீர்மானித்தோம். அகரம் என்ற புத்தகம் வெளியிட்டோம். அதில் “சுந்தர ராமசாமி: சில குறிப்புகள்” எனும் தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினேன். அதன் பிறகு பொருளாதார நெருக்கடி. திசை புலப்படாத வாழ்க்கையின் பிரமாண்டம் அச்சத்தை ஏற்படுத்தியது. புத்தகத்தை தொடரமுடியாத நிலை. இன்று திரும்பி பார்க்கும்போது அந்நினைவுகள் சுகமானதாக இருக்கிறது. அதுதான் வாழ்க்கை.

தொடர்புக்கு: tpkesavamani@gmail.com