படிக்கக் கூடாத நாவல்கள்

இந்நூலில் படிக்கக் கூடாத சில நாவல்களைக் குறித்துப் பேசியுள்ளேன். இங்கே கூடாத என்பதற்குப் பொருந்தாத அல்லது இயலாத என்று பொருள். இந்நாவல்களை வாசிக்க நேரம், காலம் அல்லது மனம் இப்படி எவைவேண்டுமானாலும் கூடாதிருக்கலாம். அவைகள் கூடுவதற்காகக் காத்திராமல் முயற்சிக்கும்போதே வாசிப்பு கூடி வரும்.


வணிக எழுத்திலிருந்து தீவிர இலக்கியத்தை நோக்கி நகர முற்படுபவர்கள் தொடக்கத்தில் வாசிக்க வேண்டிய நாவல்கள் இவை. இவைகள் வாசிக்க எளிமையான நாவல்கள் என்றாலும் வாசிப்பின் பொதுப்புத்தியில் இவற்றை அணுகும் ஒரு வாசகன் ஏமாற்றமே அடைவான். ஆயினும் தொடர்ந்த வாசிப்பின் பயிற்சியில் இந்நூல்கள் காட்டும் மேலான தரிசனத்தை நோக்கி நகர முடியும்.

இந்நூல்களின் வாசிப்பிற்கான சில திறவுகோல்களை இந்நூலில் வழங்கியிருக்கிறேன். அவைகள் அவரவர் பூட்டிற்குச் சேர்கின்றனவா என்பதை அவரவர்கள் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

அன்புடன்
கேசவமணி
25.08.2018 திருப்பூர்.

இந்நூலை வாசிக்கவும் வாங்கவும்: படிக்கக் கூடாத நாவல்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...