இலக்கிய வானில் துருவ நட்சத்திரம்

தமிழ் இலக்கியத்தின் பல முக்கியப் படைப்பாளிகளின் பெயர்கள் அறிமுகமாவதற்கு முன்னரே நான் அறிந்த பெயர் ஜெயகாந்தன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் வெளியான வார இதழ்கள் மற்றும் அவரின் சில புத்தகங்களின் மூலமாகவே அவரை நான் தெரிந்துகொண்டேன். அவரது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், பாரிஸூக்கு போ, சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் அவரின் பல படைப்புகளை அப்போது வாசித்தது நினைவிருக்கிறது. ஆனால் அப்போது அவரை எவ்வளவுதூரம் உள்வாங்கிப் படித்தேன் என்பது சந்தேகத்திற்குரியது.


ஆனால் வணிக எழுத்துக்களிலிருந்து தீவிர இலக்கியத்தின் பக்கம் சென்றபோது, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்திற்கு அப்பால் அவர் பொருட்படுத்தத் தக்கவர் அல்ல என்ற எண்ணம் எல்லோரையும் போலவே அப்போது எனக்கும் இருந்தது. 2012ல் புத்தகங்கள் குறித்து எழுத ஆரம்பித்து, அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் படித்த பிறகும், அவரைப் பற்றிய ஜெயமோகனின் பார்வையை அறிந்த பிறகும், ஜெயகாந்தனை புறக்கணிக்க வேண்டிய அவசியம் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை என்று புரிகிறது.

அவரது அனைத்துப் படைப்புகளையும் மறுவாசிப்பு செய்வது அவசியம் என்ற போதும், அவரது அக்கினிப் பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள் வாயிலாக அவர் படைப்பின் மீதான என் பார்வையை விரிவாகப் பதிந்திருக்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றிய முழுமையானதொரு கோட்டுச் சித்திரத்தை அளிப்பதே இச்சிறு நூலின் நோக்கம்.

அன்புடன்,
கேசவமணி
08.08.2018 திருப்பூர்.

இந்நூலை வாசிக்கவும் வாங்கவும்: இலக்கிய வானில் துருவ நட்சத்திரம்

Related Posts Plugin for WordPress, Blogger...