நம் நற்றிணை

நற்றிணை பதிப்பகத்தின் காலண்டிதழான நம் நற்றிணையின் முதல் இதழ் வெளியாகியிருக்கிறது. இவ்விதழ் முழுவதும் இலக்கியத்தைக் குறித்த அம்சங்களே இடம் பெற்றிருப்பது வெகு சிறப்பு. பல இலக்கிய இதழ்கள் இன்று அரசியல் இதழாக மாறிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்ததாக நம் நற்றிணை வருவது வரவேற்கத் தக்கது. நான் எனது இலக்கிய ஆசானாகக் கருதும் சி.மோகன் அவர்களின் இலக்கிய உரையாடல் தொடர்வது உவப்பான செய்தி.

114 பக்கங்கள் கொண்ட இவ்விதழ் தரமான தாளில், நேர்த்தியான அச்சாக்கத்தில், உயர்தரமாக அமைந்திருக்கிறது. கவிதை, கதை, கட்டுரை என்றில்லாமல் நாவல் பகுதியில், நற்றிணையின் புதிய நாவல்களை அறிமுகப்படுத்தும் விதமாக, நாவலின் சில பகுதிகளை இடம்பெறச் செய்திருப்பது, அந்நாவல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

இவ்விதழில் ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதை தொகுப்பான உச்சவழு நூலுக்கு நான் எழுதிய மதிப்புரை இடம்பெற்றுள்ளது.Related Posts Plugin for WordPress, Blogger...