ஜெயமோகன் வெண்முரசு

மகாபாரதம் அன்றும் இன்றும் என்றும் அனைவராலும் விரும்பி, படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் படும் ஒரு மாபெரும் இதிகாசம். ஜெயமோகன் இதை வெண்முரசு என எழுதத் தொடங்குகையில் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நிராகரிப்பான பல கருத்துக்களைக் கடந்து இன்று இந்நூல் பன்னிரண்டு பகுதிகளாக, ஏறக்குறைய 10,000 பக்கங்கள் கொண்டதாக வெளிவந்து, அனைவரையும் வாயடைக்கச் செய்திருக்கிறது. இன்னும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்நூலின் தொடர் நாவல்களைப் பற்றி நான் எழுதும்போது, இனி மகபாரதம் எனில் ஜெயமோகன் பெயரும் சேர்த்தே உச்சரிக்கப்படும் என்று குறிப்பிட்டேன். இன்று அது உண்மையாயிற்று. இன்று ஜெயமோகனின் மகாபாரதம் என்று அனைவராலும் பேசப்படுவதை கேட்க முடிகிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளவை வெண்முரசு நாவல் வரிசைக்கு நான் எனது இணையதளத்தில் எழுதி கட்டுரைகளின் தொகுப்பு. இவை அனைத்துமே ஜெயமோகன் தனது இணையத்தில் ஆயிரக்கணக்கான வாசர்களுடன் பகிர்ந்து கொண்டவை. முதற்கனல் முதல் இந்திர நீலம் வரையிலான நாவல்களுக்கு நான் எழுதியவை இந்நூலில் இடம்பெறுகின்றன.

இணையத்தில் இவற்றை எழுதியபோது, எண்ணற்ற முகம் தெரியாத வாசகர்கள் இவற்றைப் படித்தனர். அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அன்புடன்,
கேசவமணி
22.08.17
திருப்பூர்

தற்போது மின்புத்தகமாக அமேசானில் கிடைக்கும் ஜெயமோகன் வெண்முரசு நூலின் முன்னுரை.

ஜெயமோகன் வெண்முரசு


Related Posts Plugin for WordPress, Blogger...