கிராதம் கிடைத்தது!

ஜெயமோகனின் வெண்முரசு வரிசையில் பன்னிரண்டாவது நூலான கிராதம் கிடைத்தது. இந்திரநீலம் வரை தொடர்ந்த நான் மேற்கொண்டு தொடர முடியாது போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும் தொடர் நூல்களை வாங்குவதை நிறுத்தவில்லை. தற்போது எழுதிக்கொண்டிருக்கும் மகபாரதம் ஆதி பர்வம் முடியும் தருவாயில் இருக்கிறது. அதை முடித்த பின்னர் காண்டீபத்தையாவது வாசிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

கிராதத்தை அனைத்து வகையிலும் சிறப்பாக கிழக்கு வெளியிட்டுள்ளது. அச்சும் காகிதமும் தரமானதாக அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஷண்முகவேலின் அபாரமான ஓவியங்கள் நம் கற்பனையை எல்லையற்றதாகச் செய்கிறது.

புத்தக அலமாரியிலிருக்கும் வெண்முரசின் பன்னிரண்டு நூல்களையும் ஒருசேரப் பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது. எத்தகைய அசுர உழைப்பு இது என்று மலைப்பு தட்டுகிறது. எனது அலமாரியின் ஒரு பகுதியை முழுக்கவே வெண்முரசு ஆக்கரமித்துக் கொண்டுவிட்டது.

கிராதத்தின் சிறு வீடியோ பதிவு:

Related Posts Plugin for WordPress, Blogger...