May 8, 2017

என் சரித்திரம் - உ.வே.சாமிநாத ஐயர்

சுயசரிதை நூல்களில் மிக முக்கியமானது என நான் கருதுவது இரண்டு நூல்களைத்தான். ஒன்று காந்தியடிகளின் சத்திய சோதனை மற்றொன்று உ.வே.சாவின் என் சரித்திரம். இரண்டு நூல்களும் அற்புதமானவை. ஏனைய சுயசரிதை நூல்களைப் போல சுயதம்பட்ட நூலாக அன்றி வரலாற்றின் பக்கங்களில் ஓர் ஆவணமாக நிலைத்து நின்றுவிட்டவை இவ்விரு நூல்கள். இவ்விரு நூலாசிரியர்களும் தேர்ந்த எழுத்தாளரைப் போன்று தங்கள் வாழ்வின் அனுபவங்களை இந்நூல்களில் விவரித்துச் செல்வதைப் படிக்கையில் வியப்பே ஏற்படும். நான் இரண்டு நூல்களையும் ரசித்து அனுபவித்துப் படித்திருக்கிறேன்.


தமிழ் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா. தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அநேகம். பழம் பெரும் தமிழ் இலக்கியங்களைத் தேடிப்பிடித்து தமிழுக்கு மகத்தான சேவையாற்றியுள்ளார். இவர் இல்லையென்றால் தமிழின் பல நூல்களை நாம் இழந்துவிட்டிருப்போம். ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்க அவர் எடுத்துக்கொண்ட உழைப்பை, கடும் போராட்டத்தை அவரது என் சரித்திரத்தில் படிக்கும்போது உ.வே.சாவின் ஒப்பற்ற பணியின் அருமை தெரியவரும். 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்ததோடு, 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சில் பதிப்பித்திருக்கிறார். அவர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களின் பட்டியலைக் கீழே கொடுத்துள்ளேன். இவைகள் அவர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் பணியை பறை சாற்றும் பேரிகைகளாகத் திகழ்கின்றன.

புத்தகத்தின் பெயர்பதிப்பித்த ஆண்டு
நீலி இரட்டை மணிமாலை1874
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு1878
திருக்குடந்தைப் புராணம்1883
மத்தியார்ச்சுன மான்மியம்1885
சீவக சிந்தாமணி1887
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது1888
திருமயிலைத் திரிபந்தாதி1888
பத்துப் பாட்டு மூலமும் உரையும்1889
தண்டபாணி விருத்தம்1891
சிலப்பதிகாரம்1892
திருப்பெருந்துறைப் புராணம்1892
புறநானூறு1894
புறப்பொருள் வெண்பா மாலை1895
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்1898
மணிமேகலை1898
மணிமேகலைக் கதைச் சுருக்கம்1898
ஐங்குறு நூறு1903
சீகாழிக் கோவை1903
திருவாவடுதுறைக் கோவை1903
வீரவனப் புராணம்1903
சூரைமாநகர்ப் புராணம்1904
திருக்காளத்தி நாதருலா1904
திருப்பூவண நாதருலா1904
பதிற்றுப் பத்து1904
திருவாரூருலா1905
திருவாரூர்த் தியாகராச லீலை1905
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்1906
தனியூர்ப் புராணம்1907
தேவையுலா1907
மண்ணிப்படிக்கரைப் புராணம்1907
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்1908
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு1910
திருக்காளத்திப் புராணம்1912
திருத்தணிகைத் திருவிருத்தம்1914
பரிபாடல்1918
உதயணன் சரித்திரச் சுருக்கம்1924
பெருங்கதை1924
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை1925
நன்னூல் மயிலை நாதருரை1925
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்1928
தக்கயாகப் பரணி1930
தமிழ்விடு தூது1930
பத்துப் பாட்டு மூலம்1931
மதுரைச் சொக்கநாதர் உலா1931
கடம்பர் கோயிலுலா1932
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை1932
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்1932
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது1932
பழனி பிள்ளைத் தமிழ்1932
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை1932
வலிவல மும்மணிக் கோவை1932
சங்கரலிங்க உலா1933
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா1933
பாசவதைப் பரணி1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 11933
சங்கர நயினார் கோயிலந்தாதி1934
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 21934
விளத்தொட்டிப் புராணம்1934
ஆற்றூர்ப் புராணம்1935
உதயண குமார காவியம்1935
கலைசைக் கோவை1935
திரு இலஞ்சி முருகன் உலா1935
பழனி இரட்டைமணி மாலை1935
பழமலைக் கோவை1935
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை1936
கனம் கிருஷ்ணயைர்1936
கோபால கிருஷ்ண பாரதியார்1936
திருநீலகண்டனார் சரித்திரம்1936
திருமயிலை யமக அந்தாதி1936
திருவள்ளுவரும் திருக்குறளும்1936
நான் கண்டதும் கேட்டதும்1936
புதியதும் பழையதும்1936
புறநானூறு மூலம்1936
பெருங்கதை மூலம்1936
மகாவைத்தியநாதையைர்1936
மான் விடு தூது1936
குறுந்தொகை1937
சிராமலைக் கோவை1937
தமிழ்நெறி விளக்கம்1937
திருவாரூர்க் கோவை1937
நல்லுரைக் கோவை பகுதி 11937
நல்லுரைக் கோவை பகுதி 21937
நினைவு மஞ்சரி - பகுதி 11937
அழகர் கிள்ளை விடு தூது1938
சிவசிவ வெண்பா1938
திருக்கழுக்குன்றத்துலா1938
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை1938
திருமலையாண்டவர் குறவஞ்சி1938
நல்லுரைக் கோவை பகுதி 31938
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு1939
தணிகாசல புராணம்1939
நல்லுரைக் கோவை பகுதி 41939
புகையிலை விடு தூது1939
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை1939
கபாலீசுவரர் பஞ்சரத்தினம்1940
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா1940
வில்லைப் புராணம்1940
செவ்வைச் சூடுவார் பாகவதம்1941
நினைவு மஞ்சரி - பகுதி 21942
வித்துவான் தியாகராச செட்டியார்1942

இத்தகு பெருமைமிகு உ.வே.சாவின் என் சரித்திரத்தை அமேசானில் மின்புத்தகமாக பதிப்பித்திருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...