தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டணையும்

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டணையும் நாவல் வெளியாகி 150 வருடங்கள் ஆகின்றன. உலக இலக்கியங்களில் இன்றும் முதன்மையான நாவலாகத் திகழ்ந்து, தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவின் திறத்திற்குக் கட்டியம் கூறும் இந்நாவலைப் பற்றி பல்வேறு சந்தேர்பங்களில் சொல்லியிருக்கிறேன். இந்நாவலை மறுவாசிப்பு செய்த பிறகு, கரமாஸவ் சகோதரர்கள் போன்று, ஒரு நல்ல பதிவொன்றை எழுதவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இந்நாவலை தற்போது நற்றிணை பதிப்பகம் சிறப்புப் பதிப்பாக கொண்டுவந்திருக்கிறது. தரமான தாளில், நேர்த்தியான அச்சில், அசரவைக்கும் கெட்டி அட்டையில் இப்புத்தகத்தை வெளியிட்டு, பதிப்பு உலகில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது நற்றிணை. அனைவரும் இப்புத்தகத்தை வாங்கவேண்டும் எனும் ஆசையில், முதன் முதலாக, அமேசான் மற்றும் பிளிஃப் கார்ட்டில் விற்பனைக்கு வைத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் வாங்கி படித்து, தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தாற்றலை வியந்து ரசிக்கலாம்.

விற்பனை ஆகுமோ ஆகாதோ என்ற அச்சத்தில், முதல் கட்டமாக நான்கு பிரதிகள் மட்டுமே வாங்கினேன். 20 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் பிரதி விற்றுள்ளது! இன்னும் நம்மவர்களுக்கு மொழிபெயர்ப்பு நாவல்களை வாசிப்பதில் பெரும் மனத்தடை உள்ளது என்பதையே இது சுட்டுகிறது. வாசிக்கும் சிறு முயற்சியைக் கூட செய்ய முன்வராமல், புறக்கணிக்கும் எளிய காரியத்தைச் செய்யும் நம்மவர்களின் மனோபாவம் வருத்தமளிக்கிறது.

முயற்சியுங்கள். ஓர் அற்புதமான புனைவு வெளியிடை நீங்கள் உலாவலாம். அப்படிச் செய்தால், மனித மனதின் இருட்குகைக்கு உங்களை அழைத்துச் சென்று, வெளிச்சம்போட்டுக் காட்டும் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தாற்றலுக்கு நிச்சயம் சபாஷ் போடுவீர்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...