சாதனை படைக்கலாம்

பதிப்பாளர்கள்
முழுத்தொகுப்பு வெளியிட்டு
சிலாகிக்கலாம்

வாசகர்கள்
அதையும் இதையும்
தேடித்தேடி வாங்கி
அப்படி இப்படி
என்று ரசிக்கலாம்

விமர்சகர்கள்
ஒவ்வொரு எழுத்தையும்
அக்கக்காய் பிட்டுவைத்து
பக்கம் பக்கமாய்
விமர்சனம் எழுதித் தீட்டலாம்

ஏதேனும்
ஒரு புத்தகம்
பல்லாயிரம் பிரதிகள் கடந்து
விற்பனையில் சாதனை படைக்கலாம்

அந்தப் பெயர்
ஏககாலத்தில்
பல்லாயிரம் மனங்களில்
இடைவிடாது ஒலிக்கலாம்

இத்தனையும் நிகழ
பாவம்
ஒரு எழுத்தாளன்
இறந்து தொலைக்கவேண்டியிருக்கிறது

(தோன்றியது: 25.03.2017 காலை 11.35
எழுத ஆரம்பித்தது: மதியம் 1.45
இறுதி வடிவம் எட்டியது: மதியம் 2.01)

Related Posts Plugin for WordPress, Blogger...