வாசிப்பைத் தவிர

அலமாரியின் தட்டுகளில்
படித்தவை
படிக்கவேண்டியவை
என அடுக்கடுக்காய் புத்தகங்கள்
எல்லாவற்றையும்
எடுத்துப் பிரித்து
பக்கங்களைப் புரட்டுகையில்
மறைவு என்பது இழப்பா
அன்றி
பெற்றுக்கொள்ளும் தவிப்பா
என்பது புரியவில்லை
சொல்ல வார்த்தையில்லை
சொல்லும் வார்த்தைகளில்
அர்த்தமுமில்லை
செய்யக்கூடுவது
வேறொன்றுமில்லை
வாசிப்பைத் தவிர

(தோன்றியது: 24.03.2017 மதியம் 1.17
எழுத ஆரம்பித்தது: மதியம் 1.26
இறுதி வடிவம் எட்டியது: மதியம் 3.20)

Related Posts Plugin for WordPress, Blogger...