அதிகாரமும் ஆசையும்

கோப்பையின்
முதல் மிடரு
தொண்டையில் இறங்க
கசப்புமில்லாத
இனிப்புமில்லாத
துவர்ப்புமில்லாத
சுவை
சுகம் தந்தது

ஆவேசம் கொண்டவனாக
இன்னும்
இன்னும்
என்று பருகினேன்

இப்போது
அடுத்ததொரு
அடிவைக்க முடியாமல்
என்னைச் சுற்றி
கோப்பைகளும்
பாட்டில்களும்
நிறைந்துவிட்டன

செய்வதறியாது
திகைத்து
அடுத்த அடியை
மாபலியாய்
என் தலையில் வைத்தேன்

(தோன்றியது: 17.02.17 காலை 4.35
எழுத ஆரம்பித்தது: 17.02.17 காலை 5.15
இறுதிவடிவம் எட்டியது: 17.02.17 காலை 6.38)

Related Posts Plugin for WordPress, Blogger...