ஜெயமோகன் கடிதம்

கடந்த ஆறு மாதங்களாக வாசிப்பிலும், எழுத்திலும் என்னை முற்றாக விலக்கிக் கொண்டது பற்றி காணாமல் போன இணையப் பக்கம் என்று எழுதியது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஜெயமோகன் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுத்தும் உடலும் எனும் தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். அது எனக்கேயான கட்டுரையாகத் தோன்றியது. எழுதும் அனைவருக்கும் அந்தக் கட்டுரை உற்ற தோழன். உடலையும் உள்ளத்தையும் எவ்வாறு பேண வேண்டும் என்பதை தன்னுடைய சொந்த அனுபவங்களைக் கொண்டு ஜெயமோகன் எழுதிய அந்தக் கட்டுரை, சுவர் இன்றி சித்திரம் இல்லை என்பதை உணரச் செய்ய, அதைக் குறித்து அவருக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு ஜெயமோகன் தன்னுடைய இணையத்தில் பதிலளித்தார். அவையிரண்டையும் கீழே தந்திருக்கிறேன், எப்போதும் ஒரு பதிவாக அது புத்தக அலமாரியில் நிலைத்திருக்கும் என்பதற்காக.
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் எழுத்தும் உடலும், எழுதும் அனைவருக்கும் இன்றியமையாத, பயனுள்ள யோசனை. கடந்த ஆறு மாதங்களாக வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபடாமலிருந்து, மீண்டு வந்த எனக்கு தங்களின் கட்டுரை ஒரு பாடமாக அமைந்து, உடலுக்கு தெம்பையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும் தருவதாக இருந்தது.
தற்போதுதான் தங்களின் இந்திர நீலம் முடித்தேன். விரைவில் அது பற்றி எழுதப்போகிறேன்.
அன்புடன்,
கேசவமணி.
***
அன்புள்ள கேசவமணி,
மீண்டும் எழுதவந்தமைக்கு வாழ்த்துக்கள். எழுத்து என்பது நம்முடைய ஆளுமையின் ஒருபகுதி. ஒரு பறவை பாடுவதைப்போல. பாடாமலிருக்க அதனால் முடியாது. எழுதாத எழுத்தாளன் என்பவன் தன்னளவில் தோல்வியடைந்தவன். ஆகவே எழுதுங்கள். எழுத்தினால் வரும் பிரச்சினைகள் உட்பட அனைத்துக்கும் அதுவே மருந்து.
ஜெ
Related Posts Plugin for WordPress, Blogger...