காலச்சுவடின் ‘அசோகமித்திரன் சிறுகதைகள்’

அசோகமித்திரன் சிறுகதைகள் புத்தகத்திற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை காலச்சுவடு அறிவித்துள்ளது. தி.ஜானகிராமன் சிறுகதைகளுக்கு செம்பதிப்பு இல்லையென்ற குறையை முன்னர் நிவர்த்தி செய்த காலச்சுவடு இப்போது அசோகமித்திரன் சிறுகதைகளை வெளியிடுவது மனதுக்கு நிறைவைத் தருகிறது. ராயல் அளவில், கெட்டி அட்டையில், 1632 பக்கங்கள் கொண்ட இப்பெரும் தொகுப்பின் விலை ரூபாய் 1,450/- இப்புத்தகத்தின் முன்வெளியீட்டு விலை ரூபாய் 950/- எனவே இலக்கிய ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளவும்.

படிக்கும் அனைவரின் இல்லத்திலும் அவசியம் இருக்கவேண்டிய புத்தகம் இது. அசோகமித்திரன் 1956 முதல் 2015 வரை எழுதிய சிறுகதைகள் அடங்கிய அரிய பொக்கிஷம் இது.  இதற்கு முன்னர் அவரது சிறுகதைகள் நர்மதா பதிப்பகத்தில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்ததாக நினைவு. நான் அதைத் தவறவிட்டதால் அசோகமித்திரன் கதைகள் எனக்கிடைத்த அனைத்துப் புத்தகங்களையும் வாங்கத்தொடங்கினேன். அப்படியிருந்தும் அவரின் மொத்த கதைகளும் கிடைக்காதது ஏமாற்றத்தைத் தந்த வேளையில் இப்புத்தகத்தின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...