தி தாவோ தே ஜிங்

நூற்றுக்குக் குறைவான பக்கங்கள் உடைய மிகச் சிறிய சீனப் புத்தகம் தி தாவோ தே ஜிங். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோட்சு எனும் ஞானியால் எழுதப்பட்டது. மிகப் பரவலாக உலகமெங்கும் படிக்கப்பட்ட, போற்றப்பட்ட புத்தகமும் இதுவே. மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கொடை, பொக்கிஷம் இந்தப் புத்தகம். இதை ஒரு புத்கதம் என்பதை விட மனிதனின் சுவாசம், வாழ்க்கை எனலாம். பைபிளுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம் என்ற பெருமை இதற்கு உண்டு.

இந்தப் புத்தகம் எந்தச் சூழ்நிலையில் எப்படி எழுதப்பட்டது என்பதை ஓஷோ ஓர் அழகான கதை மூலம் விவரித்துள்ளார். (லாவோட்சுவின் புத்தகம் பிறந்த கதை என்ற பதிவில் அதைக் காணலாம்). க்ரியாவின் வெளியீடாக சி.மணி என்பவரால் தமிழாக்கம் பெற்றுள்ளது. அதை வாங்கிப் படிக்கத் தொடங்கியபோது அந்த தமிழாக்கம் கடுந்தமிழாக இருப்பதை உணர முடிந்தது. எனவே ஆங்கிலத்தில் இதற்கான மொழியாக்கத்தைத் தேடினேன். இந்தப் புத்தகத்திற்கு எண்ணற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் Brian Browne Walker, Stephen Mitchell, Derek Lin ஆகிய மூவரின் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத் தக்கன.

இந்தப் புத்தகங்களுடன் சி.மணியின் தமிழாக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆங்கிலத்தில் கூட எளிதாகப் புரிந்துவிடும் அளவிற்குப் பல இடங்கள் கடுமையாக இருந்தன. சில இடங்களில் எளிமையாக இருந்தன. இருப்பினும் வாசிக்கும் போது ஆங்கிலத்தில் உள்வாங்கும் அளவிற்குத் தமிழில் உள்வாங்க இயலவில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழில் ஒப்பிட்டுச் சொல்ல வேறு மொழியாக்கம் இருக்கிறா என்பது தெரியவில்லை. இந்தப் புத்தகத்தில் மொத்தம் 81 கருத்துகள் உள்ளன. அவற்றைக் கவிதைகள், பாடல்கள் அல்லது அத்தியாயங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தமிழ் மொழி பழமையானது, தொன்மையானது என்கிறோம் ஆயினும் அதில் ஒரு கருத்தைச் சொல்லும்போது அது நமக்குக் கடினமாக இருப்பது ஏன்? இது மொழியின் போதாமையா அல்லது மொழிபெயர்ப்பின் போதாமையா?

சி.மணி:

எடுத்துச் சொல்லக்கூடிய தாவோ
நிரந்தரத் தாவோ இல்லை.
விளக்கப்படக்கூடிய பெயர்
மாறாத பெயர் இல்லை.

இருத்தலின்மை என்பது
வானக, வையகத்தின்
தோற்றுவாய் எனப்படுகிறது.
இருத்தல் என்பது
அனைத்தின் அன்னை எனப்படுகிறது.
எனவே, நிரந்தர இருத்தலின்மையிலிருந்து
இந்தப் பிரபஞ்சத்தின்
புதிரான தொடக்கத்தைச்
சலனமின்றி நாம் பார்க்கிறோம்.
எனவே, நிரந்தர இருத்தலிலிருந்து
இந்தப் பிரபஞ்சத்தின்
புறத் தோற்ற வேறுபாடுகளைத்
தெளிவாக நாம் பார்க்கிறோம்.

இருத்தலின்மையும் இருத்தலும்
ஆதியில் ஓரே மாதிரி;
ஆனால், வெளிப்படும்போது
வேறு வேறு.
இந்த ஒற்றுமை
நுண்மையின் நுண்மை எனப்படுகிறது.
பிரபஞ்சப் பகுதிகளின் தொடக்கம்
வெளிவருகிற வாயில்
இந்த எல்லையற்ற
நுண்மையின் நுண்மையாகும்.

Brian Browne Walker: இவரது மொழியாக்கம் அலாதியானது. படிக்கப் படிக்கவே சொல்லவந்த கருத்தை கிரகித்துக் கொண்டே பயணிக்க முடியும். எனவே நம் மூளைக்கான வேலைப் பளுவை இவரது மொழியாக்கம் கணிசமாகக் குறைத்து விடுகிறது.

Tao is beyond words
and beyond understanding.
Words may be used to speak of it,
but they cannot contain it.

Tao existed before words and names,
before heaven and earth,
before the ten thousand things.
It is the unlimited father and mother
of all limited things.

Therefore, to see beyond boundaries
to the subtle heart of things,
dispense with names,
with concepts,
with expectations and ambitions and differences.

Tao and its many manifestations
arise from the same source:
subtle wonder within mysterious darkness.

This is the beginning of all understanding.

Stephen Mitchell: வாக்கர் தனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளராக இவரையே குறிப்பிடுகிறார். இதுவும் முந்தைய மொழியாக்கம் போலவே எளிமையானது என்றாலும் சில இடங்களில் நெருடவும் செய்கிறது.

The tao that can be told
is not the eternal Tao
The name that can be named
is not the eternal Name.

The unnamable is the eternally real.
Naming is the origin
of all particular things.

Free from desire, you realize the mystery.
Caught in desire, you see only the manifestations.

Yet mystery and manifestations
arise from the same source.
This source is called darkness.

Darkness within darkness.
The gateway to all understanding.

Derek Lin: இவரின் மொழியாக்கமும் ரசிக்கத் தக்கதே. இருப்பினும் படித்தவுடன் உள்வாங்குவது சாத்தியமில்லை. சற்று கவனத்தோடும் சிரத்தையோடும் படிப்பது அவசியம்.

The Tao that can be spoken is not the eternal Tao
The name that can be named is not the eternal name
The nameless is the origin of Heaven and Earth
The named is the mother of myriad things
Thus, constantly without desire, one observes its essence
Constantly with desire, one observes its manifestations
These two emerge together but differ in name
The unity is said to be the mystery
Mystery of mysteries, the door to all wonders.

Related Posts Plugin for WordPress, Blogger...