February 3, 2015

படிக்கவேண்டிய முக்கிய புத்தகங்கள்

நான் இதுவரை எழுதிய புத்தகங்களின் விமர்சனங்களிலிருந்து அவசியம் படிக்கவேண்டியவை என்று பின்வரும் புத்தகங்களைக் குறிப்பிட முடியும். இதுவரை படிக்காதவற்றையும், படித்து எழுதாதவற்றையும் நான் இங்கே குறிப்பிடவில்லை. படித்து எழுதாதவற்றை மீண்டும் மறுவாசிப்பு செய்யவேண்டியிருப்பதால் அதைக் குறித்தும் ஒன்றும் சொல்லாமல் விடுகிறேன். ஒவ்வொரு புத்தகமும் வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கோணத்தையும் காட்டுகிறது. இவற்றினூடே பயணிக்கும் வாசகன் வாழ்வையும், தன்னைச் சுற்றியுள்ள உறவுகளையும் புரிந்துகொள்ள முடிவதோடு அதற்கும் அப்பால் தன்னைத்தான் உணரும் மேலான கலையைக் கற்றுக்கொள்ள முடியும். புத்தகங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல அதற்கும் மேலாக வாழ்வைக் கற்றுத்தருகின்றன என்ற எண்ணமுடையவர்கள் இப்புத்தகங்களை ரசிக்க முடியும்.

  1. Meetings With Remarkable People -Osho
  2. கரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்
  3. ஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்
  4. அறம் -ஜெயமோகன்
  5. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி: காலத்தின் குரல்
  6. சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை -வண்ணங்களின் விபரீதம்
  7. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் -சி.மோகன்
  8. யாமம் -எஸ்.ராமகிருஷ்ணன்
  9. வெள்ளை யானை -ஜெயமோகன்
  10. வாழ்வின் சில உன்னதங்கள் -விட்டல்ராவ்
  11. ஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
  12. காசியபனின் அசடு: நாவல் வானில் துருவ நட்சத்திரம்
  13. க.நா.சுவின் சர்மாவின் உயில்: வாழ்க்கை vs இலட்சியம்
  14. ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம்: வாழ்க்கைக்கான அருமருந்து
  15. புயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்
  16. சா.கந்தசாமியின் சாயாவனம்-இயற்கையோடு தோழமை
  17. தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்-படைப்பின் சிகரம்
  18. சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம்-மனதின் போராட்டம்
  19. வண்ணநிலவனின் கடல் புரத்தில்-வாழ்வின் யதார்த்தம்
  20. புலிநகக் கொன்றை-வாழ்க்கையின் முழுமையான பார்வை
  21. பௌலோ கொய்லோவின் ரஸவாதி-வாழ்க்கை இக்கணம் இப்போதே
  22. எர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் -வாழ்வின் சாகசம்
  23. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் -பின்தொடரும் நிழல்
  24. எஸ்.ராவின் உறுபசி-வாழ்வின் ஆதாரதேடல்
  25. எஸ்.சம்பத்தின் இடைவெளி-அறிவின் தேடல்
  26. அசோகமித்ரனின் தண்ணீர் - ஒரு பார்வை
  27. ஆர்.சண்முகசுந்தரம் -நாகம்மாள்
(பட்டியலின் சுட்டியைக் கிளிக்கினால் அந்ததந்தப் பதிவைப் படிக்க முடியும்)

Related Posts Plugin for WordPress, Blogger...