January 20, 2015

Meetings With Remarkable People -Osho


வெளியீடு: வாட்கின்ஸ் பப்ளிஷிங்
பக்கங்கள்: 242
விலை: ரூபாய் 400
வடிவம்: டெம்மி
கட்டமைப்பு: மெல்லிய அட்டை



தற்போது நான் படித்த அற்புதமான ஒரு புத்தகம் ஓஷோவின் Meetings With Remarkable People. புத்தர், போதிதர்மா, கலீல் ஜிப்ரான், யேசு, மீரா, சாக்ரட்டீஸ் என 19 ஞானிகளின் வாழ்க்கையைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை ஒரு பொக்கிஷம் எனலாம். ஓஷோவின் பல்வேறு உரைகளிலிருந்து சேகரித்து இந்தப் புத்தகம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. வரலாறு நமக்கு உபயோகமற்றது. நெப்போலியன், அலெக்ஸாண்டர், ஸெங்கிஸ்கான் இவர்களைப் படித்து ஆகப்போவது என்ன? மனித குலத்தின் விழிப்புணர்வுக்கு இவர்கள் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பும் ஓஷோ, உண்மையாக நாம் படிக்க வேண்டியது, தெரிந்துகொள்ள வேண்டியது, பின்பற்ற வேண்டியது இவர்களை அல்ல என்கிறார். மாறாக வரலாற்றில் காணப்படாத லாவோட்சு, போதிதர்மா, புத்தர், கிருஷ்ணர் போன்ற ஞானிகளின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிப்பதே நாம் நம்மை அறிந்துகொள்ள முயல்வதாகும் என்கிறார்.

வரலாறு புத்தரைப் பற்றி எதையும் பதிவு செய்யவில்லை. அதனால்தான் புத்தர், மகாவீரர், ஜதுராஷ்டிரர் ஆகியோரைப் பற்றி கேட்கும்போது, அவர்கள் வரலாற்றில் வாழந்தவர்களாக இல்லாமல் புராணக் கதை மாந்தர்களாக நமக்குத் தெரிகிறார்கள். அவர்கள் மனிதன் கனவிலும், கவிஞர்களின் கவிதையிலும் மட்டுமே இருந்திருக்க முடியும் நிஜமாக இருந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஆனால் அவர்கள் உண்மையாக இருந்தவர்கள், அவர்கள் தங்களுக்குப் பின்னால் எந்தவொரு தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஓஷோ.

குழந்தைகளுக்கு வரலாற்றைக் கற்பிக்கிறோம் ஆனால் புராணங்களை அல்ல. கணிதத்தைக் கற்பிக்கிறோம் கவிதையை அல்ல என்று சொல்லும் ஓஷோ விவரித்துச் சொல்லும் இந்த ஞானிகளின் வாழ்க்கை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. ஓஷோ தனக்கேயான புரிதலுடனும் அழகுடனும் அற்புதமாக பேசிச்செல்கிறார். அவற்றைப் படிக்கப் படிக்க நாம் மெய்மறந்து போகிறோம். அவர் சொல்லும் அழகில் நாம் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக மயங்குகிறோம். மனித குலத்தின் விழிப்புணர்வுக்கு தொண்டாற்றிய இத்தகைய ஞானிகளின் வாழ்க்கை வரலாறாக அல்ல புராணங்களாகவே நமக்குக் கிடைக்கிறது. எனவே வரலாறு என்ற நோக்கில் அல்லாமல் புராணமாக அவர்களை அணுகுவதே அழகானது அற்புதமானது என்கிறார்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பது ஓர் அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவரும் ரசித்துப் படிக்க ஒர் அருமையான புத்தகம் Meetings With Remarkable People. Watkins Publishing Ltd., London இந்தப் புத்தகத்தை அழகாக, நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது. அமேசானில் வாங்கலாம். தன்னை உணரும் உந்துதல் உடையவர்களுக்கு இந்தப் புத்தகம் ஓரு வரப்பிரசாதம் எனலாம்.

அமேசானுக்கு எழுதிய ஆங்கில வடிவம்:


Meetings with remarkable people by Osho was a wonderful book I have read in recent time. 19 great personalities, like Bodhidharma, Buddha, Krishna, Lao Tzu, Rumi and Socrates life and incidents are very well described by Osho in a stylish way make this book as treasurer. History was useless said Osho. Knowing Alexander. Napoleon and Genghis Khan was utter waste. They can't do anything to human consciousness. We can not follow these historical persons but our real followers are Buddha, Krishna and as such.

As for as Osho was concerned the History does not reveal anything to such great personalities. They can look like only Mythological characters. So we teach our children history and not Mythology. We teach them arithmetic not poetry. But these are the persons who are the real foundations of human consciousness. History is dead but mythology is for ever. So knowing these wonderful persons are worth much more than historical ones.

Read this book was a great experience. Not only those who are interested in spiritual but others also read this book with great joy and pleasure. Watking Publishing published this books very good in print and paper. Those who are not yet read this book grab it and enjoy the pleasure of good reading.

Related Posts Plugin for WordPress, Blogger...