January 21, 2015

Body Mind Balancing -Osho

  • Pages: 192
  • Price: Rs.241
  • Publisher: Griffin St. Martin's Press
  • Year: May 2005
  • Language: English
  • Binding: Paperback
  • Product Dimensions: 13.9 x 1.4 x 20.9 cm
  • Amazon Bestsellers Rank: #7,816 in Books 


ஒவ்வொரு நாளும் உடம்பின் மொழியைக் கேட்கும் ஆற்றலை நாம் இழந்து வருகிறோம். உடம்புக்கு எப்போது என்ன தேவை என்பதை உணரும் சக்தியை இழந்துவிட்டோம். உடலோடு இயைந்த வாழ்க்கையைவிட உயர்வானது ஏதுமில்லை.

நாம் வாழ்வில் செய்யவேண்டியதாகக் கருதும் பெரிய பெரிய காரியங்களைவிட சிறிய சிறிய காரியங்களைச் செய்வதால் நம் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். பெரிய காரியங்களைச் செய்யும் முயற்சியில் நாம் நம் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். டீ அருந்துவது, காலையில் நடப்பது, உணவைத் தயாரிப்பது, தோட்டங்களைப் பராமரிப்து, உடைகளைத் துவைப்பது மட்டுமல்ல, முன்பின் தெரியாத ஒரு நபருக்கு ‘ஹலோ’ சொல்வது, மரங்களுடன் உரையாடுவது, பறவைகளுக்குப் பாடுவது போன்ற சிறிய சிறிய காரியங்களில்தான் வாழ்வின் அர்த்தம் நிரம்பியிருக்கிறது.

நம் வாழ்க்கை பிறரைப் பார்த்து நகல் படுத்தும் வாழ்க்கையாக இல்லாமல் அசலானதாக இருக்கவேண்டும். சரி அல்லது தவறு என்ற சொற்களால் வாழ்வைக் கட்டுப்படுத்த வேண்டாம். இன்று சரியாக இருப்பது நாளை தவறாகலாம். அதேபோன்று இன்று தவறானது நாளை சரியாக மாறலாம். எனவே வார்த்தைகளில் வாழ்வதை விட்டுவிட்டு, உடம்பின் மொழியைக் கேட்கப் பழக வேண்டும். புல் வெளியில் படுப்பது, ஆற்றில் குளிப்பது, சூரியனில் காய்வது போன்றவற்றின் மூலம் உடம்பை உணரும் ஆற்றலை, உடம்பால் உணரும் ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கோபம் வரும்போது கோபப்படுங்கள். சிரிப்பு வரும்போது சிரியுங்கள். அழத் தோன்றினால் அழுங்கள். அப்போதே நம் உடம்பின் அனைத்து பாகங்களும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும். அதில் ஒரு தாள லயத்தை கொண்டுவர முடியும். வாழ்க்கையை அதன் முழு அழகோடு வாழுங்கள். வாழ்வின் மகிழ்வும், துயரமும் உங்களின் கைகளில்தான் இருக்கிறது. உடம்பின் மொழியைக் கேட்கத் தொடங்கினால் மகிழ்ச்சி தன்னால் கூடும்.

நாம் எப்போதும் ஒரே உணர்வோடு இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். மகிழ்ச்சி துயரம், கோபம் அன்பு, சிரிப்பு அழுகை எல்லாமே மாறிமாறி வரத்தான் செய்யும். அதை உணர்ந்து வாழ்வை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

மனதிலிருந்து தொடங்கி உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒருபோதும் முடியாது. அதை உடம்பிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். உடம்பை தளர்வாக்கினால் மனம் தன்னால் ஆசுவாசமடைந்துவிடும். அதன் பிறகு உள்ளத்தை ஆசுவாசப்படுத்தலாம். அதன் பிறகே உடம்பு, மனம், உள்ளம் இவற்றைத் தாண்டியிருக்கும் ஆன்மாவை ஆசுவாசப்படுத்த முடியும்.

இவ்வாறாக எண்ணற்ற சிந்தனைகளைக் கொண்ட புத்தகம்தான் ஓஷோவின் Body Mind Balancing. நமது மனதிலும் உடம்பிலும் இத்தனை விசயங்கள் பொதிந்திருக்கின்றனவா என்ற வியப்பு இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு ஏற்படுகிறது. நாம், உடல் மனம் என இரண்டாக பிளவு பட்டிருக்கிறோம். அவையிரண்டும் இயைந்து பணியாற்றும் போதுதான் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் கிட்டும் என்பதை இந்தப் புத்தகம் அற்புதமாக, ஆழமாக, அறிவியல் பூர்வமாக விவரிக்கிறது. மருத்துவரும் அறியாத பல நுட்பமான செய்திகளைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம் ஓஷோவை நாம் மற்றொரு பரிமாணத்தில் உணர வழிசெய்கிறது. ஒரு ஆன்மிகவாதி மருத்துவராக மாறி நம்முடன் உரையாடுவதை இந்தப் புத்தகத்தில் கண்டு வியக்கிறோம். எளிமையான புத்தகம் ஆயினும் எண்ணற்ற கருத்துக்கள்! நாம் நம்மையும் நம் உடம்பையும் அதிகமும் அறிய, உணர இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி.

அமேசானுக்கு எழுதிய ஆங்கில வடிவம்:

Day by day we have lost our contact language with body. We don’t know when where and what our body needs. We have lost our harmonious life with the body. We are try to achieve something bigger in life rather than do small things and be happy. So the bigger goal drag our life so that we can’t enjoy the life itself rather than to achieve something. Drinking tea, morning walk, preparing food, gardening, washing clothes are such small things that we are doing with awareness gives life some meaning. Not only this ‘hello’ to the stranger, talking with birds and trees are so beautiful and meaningful.

Our life is be original rather than carbon copy of the others. Don’t control the life with right and wrongs. Today’s wrong may be right tomorrow and vice versa. So don’t live in and with words alone. But be aware of what our body needs. Lay down on the grass, bathing in the river, feel the warmth of sun are immense help to aware of your body more and more. Knowing body more and more is the only way to understand our body language and through that we can do balancing the mind with body. You cannot relax with mind. First you start with the body. If the body relax then only you can relax the mind through that you can relax heart and soul.

Don’t control any emotions. If your are angry be angry. If you want to laugh then laugh. If you want to cry then cry. We can fill the gap with body and mind without control any emotions so that harmony in body and mind possible. Life’s happiness and misery is within your hand only. If you listen what the body says then happiness will be automatically come to you. We can’t stay and live in only one emotions. Happiness, misery, anger, love, laughter are all part of the life. Understand this and lead the life accordingly.

These are the some samples of understanding while we go through the book Body Mind Balancing by Osho. We can divide with body and mind so that without create harmony between these two we can’t achieve anything in life is the very basic things we can understood with the help of the book. How many important things spread all over the books by Osho is really wonder us. We can realize Osho is not only the spiritual thinker but also a well knower of body also.

Related Posts Plugin for WordPress, Blogger...