தற்போது வாங்கிய புத்தகங்கள்

ஏற்கனவே எனது நூலகம் பட்டியலில் பட்டியலிடப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைப் புத்தகங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றைப் பட்டியல் படுத்துவதில் ஒரு சோம்பேறித்தனம்! இந்நிலையில் கடந்த ஒரு மாத அளவில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. பட்டில்கள் மட்டும் நீண்டு கொண்டேயிருக்க வாசிப்பு அந்த வேகத்தில் நிகழாதது வருத்தமளிப்பது. வாசிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்களே மேலும் புத்தகங்களை வாங்குவதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்பது விசித்திரமான உண்மை. அண்மையில் தி இந்துவில் தன் வீட்டின் பதின்மூன்று அறைகளில் ஒரு லட்சம் புத்தகங்களை வைத்திருக்கும் பாலசுப்பிரமணியன் பற்றிய செய்தி எனக்குப் பொறாமையை ஏற்படுத்தியது! வாங்கியதோடு மனிதர் அனைத்தையும் படித்தும் விடுகிறார் என்பது வியப்பை ஏற்படுத்துவது. அக்டோபர் 25, 2014 அன்று வெளியான அந்தச் செய்தியிலிருந்து அவரது பேட்டி:

பொறியாளரும் நிர்வாகவியல் ஆலோசருமான பாலசுப்பிரமணியனிடம் பேசினால், பேசப் பேச ஆச்சர்யங்கள் கொட்டுகின்றன.

“எங்கப்பா கனகசபை, பொதுப்பணித் துறையில் பொறியாளராக இருந்தவர். பார்க்கும்போதெல்லாம் புத்தகத்தோடேயேதான் இருப்பார் அவர். ‘இதைத்தான் படிக்கணும்னு இல்லை. எதெல்லாம் பிடிக்குதோ அதையெல்லாம் படி’ம்பார். அப்பாக்கிட்ட இருந்து தான் தொத்திக்கிட்டு பழக்கம். பிள்ளைங்க விளை யாட்டு சாமான் வேணும்னு அடம் பிடிக்குற காலத்துலேயே அதெல்லாம் வேணாம்; புத்தகம் வாங்கிக் கொடுங்கன்னு கேக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஒரு நாளைக்கு 7 தினசரி பத்திரிகைகளை வாங்குறேன். தமிழ், ஆங்கிலம்னு மாசம் 80 வெளியீடு களைப் படிக்குறேன். வீட்டுல புத்தகங்களுக்கு மட்டும் 13 அறை கட்டிவெச்சிருக்கேன். புத்தகங்களை வாங்கிறதோட இல்லை; இங்கே உள்ள எந்தப் புத்த கத்தைக் கேட்டீங்கன்னாலும் படிச்சிருப்பேன்.

வாசிப்பு என்னோட அறிவையும் மனசையும் விசாலமாக்குறதோட மட்டும் இல்லை; தொழில், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய அளவுல உதவி யிருக்கு. போகப் போக இதை அவங்க உணர்ந்தாங்க. இன்னைக்கு 35 கல்லூரிகள்ல நான் கவுரவ பேராசிரியரா இருக்கேன். 75 நிறுவனங்களுக்கு ஆலோசகரா இருக்கேன். ஒரு நாளைக்குக் குறைஞ்சது 10 மணி நேரம் வாசிப்புக்குச் செலவிடுறேன்.

வாசிக்கிறதோட இல்லை; எழுதவும் செய்றேன். இது வரைக்கும் நிர்வாகவியல் தொடர்பாக ஆங்கிலத்துல 27 புத்தகங்களையும் தமிழ்ல சுய முன்னேற்றம் தொடர்பாக 10 புத்தகங்களையும், சின்ன வெளியீடுகளா புத்தகங்கள் 12 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுருக்கேன்.

வாசிக்கிறது ஒரு தியானம் மாதிரி. புத்தகங்கள் வெவ்வேற உலகங்களுக்கு நம்மை அழைச்சிக்கிட்டு போகுது. நம்ம ஊர்ல பலரும் பாடப் புத்தகங்கள் படிக்கிறதோட வாசிப்பைக் கைவிட்டுர்றாங்க. குடும்பத்தோட ஒரு சினிமாவுக்குப் போக, ஹோட்டல்ல போயி சாப்பிட ஐந்நூறு, ஆயிரம் செலவு செய்றவங்க புத்தகங்களுக்குச் செலவு செய்ய யோசிக்கிறாங்க.

புத்தகங்கள் வாங்குறது செலவு இல்லை; அது முதலீடு. ஒரு வகையில, பல தலைமுறைகளுக்கான முதலீடு அது. திருச்சி புத்தகக் காட்சியில வாங்குன புத்தகங்கள்ல பாதியைப் படிச்சு முடிச்சுட்டேன். சென்னைப் புத்தகக் காட்சி எப்போடா ஆரம்பிக்கும்னு ஆவலோடு காத்திருக்கேன்!”

- எஸ். கல்யாணசுந்தரம், 
தொடர்புக்கு: kalyanasundaram.s@thehindutamil.co.in 
படம்: ஜி.ஞானவேல்முருகன்

புத்தகம்வகைஆசிரியர்வெளியீடு
Take It EasyZen BudhisamOshoOsho Media International
வானம் வசப்படும்நாவல்பிரபஞ்சன்நற்றிணை
ஏழாவது உலகம்நாவல்ஜெயமோகன்நற்றிணை
சங்கச் சித்திரங்கள்கட்டுரைஜெயமோகன்நற்றிணை
ஜெயமோகன் குறுநாவல்கள்குறு நாவல்ஜெயமோகன்நற்றிணை
அறுபத்து மூவர் கதைகள்புராணம்சேக்கிழார்பிரேமா பிரசுரம்
ஸ்ரீதரன் கதைகள்சிறுகதைகள்ஸ்ரீதரன்காலச்சுவடு
தோட்டியின் மகன்நாவல்தகழி சிவசங்கரன் பிள்ளைகாலச்சுவடு
சித்தன் போக்குசிறுகதைகள்பிரபஞ்சன்காலச்சுவடு
கரிசல் கதைகள்சிறுகதைகள்தொகுப்புஅன்னம் பி.லிட்.
சாலப்பரிந்துசிறுகதைகள்நாஞ்சில் நாடன்காலச்சுவடு
ஆறாம் திணை-2மருத்துவம்கு.சிவராமன்விகடன் பிரசுரம்
திருடன் மணியன்பிள்ளைநாவல்ஜி.ஆர்.இந்துகோபன்காலச்சுவடு
பனிநாவல்ஓரான் பாமுக்காலச்சுவடு
கொற்கைநாவல்ஜோ.டி.குருஸ்காலச்சுவடு
கொரில்லாநாவல்ஷோபாசக்திஅடையாளம்

Related Posts Plugin for WordPress, Blogger...