2014 ஈரோடு புத்தகத் திருவிழா

10வது ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு கடந்த இரு ஞாயிறும் சென்றிருந்தேன். எல்லா புத்தக அரங்குகளையும் பார்வையிட முடியாததால், எனக்குத் தேவையான பதிப்பகங்களில் மட்டுமே நேரத்தைச் செலவிட்டேன். நற்றிணையில் ஜெயமோகனின் மகாபாரத வரிசையிலான இரண்டாவது நாவல் மழைப் பாடல் வந்திருந்தது. நான் ஏற்கனவே செம்பதிப்புக்கு பதிவுசெய்துள்ளேன். விஷ்ணுபுரம், உப பாண்டவம் இரண்டும் என்னிடம் முதல் பதிப்புப் பிரதிகள் உள்ளன. இருந்தும் புதிய பதிப்புகள் நேர்த்தியாகவும், கண்களைக் கவர்வதாகவும் இருக்கவே அவற்றை மீண்டும் வாங்கினேன். அவற்றை மறுவாசிப்பு செய்யும் உத்தேசத்தில் இருக்கிறேன். விடுபட்ட ஜெயமோகனின் அனைத்து நூல்களையும் வாங்கும் எண்ணம் இருக்கிறது.  நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

1. கொழுத்தாடு பிடிப்பேன் –அ.முத்துலிங்கம் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்) –காலச்சுவடு.
2. புறப்பாடு –ஜெயமோகன் –நற்றிணை.
3. அனல் காற்று –ஜெயமோகன் –தமிழினி.
4. பனி மனிதன் –ஜெயமோகன் –நற்றிணை.
5. சுந்தர ராமசாமி நினைவின் நதியில் – ஜெயமோகன் –நற்றிணை.
6. இரவு –ஜெயமோகன் –தமிழினி.
7. முதல் மனிதன் –ஆல்பர் காம்யு –க்ரியா.
8. நிலாக்கள் தூரதூரமாக –பாரத தேவி –தமிழினி.
9. இன்றைய காந்தி –ஜெயமோகன் –தமிழினி.
10. காவல் கோட்டம் –சு.வெங்கடேசன் –தமிழினி.
11. காந்தியை அறிதல் –தரம்பால் –காலச்சுவடு.
12. நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் –காலச்சுவடு.
13. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது –சி.சு.செல்லப்பா –காலச்சுவடு.
14. அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் –அ.கா.பெருமாள் –காலச்சுவடு.
15. முச்சந்தி இலக்கியம் –ஆ.இரா.வேங்கடாசலபதி –காலச்சுவடு.
16. உப பாண்டவம் –எஸ்.ராமகிருஷ்ணன் –விஜயா.
17. விஷ்ணுபுரம் –ஜெயமோகன் –நற்றிணை.
Related Posts Plugin for WordPress, Blogger...