August 11, 2014

2014 ஈரோடு புத்தகத் திருவிழா -2

பல நாட்களாக எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியப் பேருரைகள் வாங்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால் சென்ற திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வாங்க முடியாமல் போனது. எனவே 2014 ஈரோடு புத்தகத் திருவிழாவில் கண்டிப்பாக வாங்க முடிவுசெய்திருந்தேன். ஆனால் புத்தகத்துடன் அவரின் உரைகள் டிவிடி வடிவிலும் இருக்கவே, இரண்டில் எவற்றை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இறுதியில், உரைகளை படிப்பதைவிடவும் கேட்பது சிறந்தது என்று 7 டிவிடி-களை வாங்கினேன்.

1. டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’

2. தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’

3. பாஷோவின் ‘ஜென் கவிதைகள்’

4. ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’

5. ஹோமரின் ‘இலியட்’

6. ‘ஆயிரத்தோரு அராபிய இரவுகள்’

7. ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’

மேற்கண்ட ஒவ்வொரு தலைப்பும் இரண்டு மணி நேரங்களுக்கு பேசப்பட்டுள்ளது. எனவே 14 மணி நேரம் நாம் இப் பேருரையில் மூழ்கித் திளைக்கும் அரிய வாய்ப்பு கிட்டும்! அது நிச்சயம் ஓர் அற்புதத் தருணமாக இருக்கும் என நம்புகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...