திருக்குறள் உரை: அவையஞ்சாமை

குறள் பால்: பொருட்பால்
அதிகாரம்: 73. அவையஞ்சாமை

ஒருவர் கற்றதனால் மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்தவராக முடியாது. மாறாக தான் கற்றவற்றைப் பிறர்க்குப் புரிம்படி எடுத்துச் சொல்லும் ஆற்றல் மிக்கவரே சிறந்தவராவார். அத்தகைய இயல்பு எந்த ஒரு இடத்திலும் அஞ்சாமல் தன் கருத்தை ஆணித்தரமாக மற்றுமின்றி பிறர் மனம் கவரும்படியாக சொல்பவருக்கே வரும். அப்படியான அவையஞ்சாமையைக் குறித்துப் பேசுகிறது இவ்வதிகாரம்.

குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
உரை:
அவையறிந்து கற்றார் அவையில் பேசுவதில் தளர்ச்சியடையார்
சொற்களின் தொகையறிந்த தூய்மையானவர்.

குறள் 722:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
உரை:
கற்றவரில் மேம்பட்டவர் என்பவர் கற்றார்முன்
கற்றதை மனம் விரும்புமாறு சொல்லுவார்.

குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
உரை:
போர்க்களத்தில் போரிட்டு இறப்பவர் பலரெனில் சிலரே
சான்றோர் அவையில் அஞ்சாமல் பேசுபவர்.

குறள் 724:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
உரை:
கற்றார்முன் கற்றதை மனம் விரும்புமாறு சொல்லித் தம்மைவிட
கற்றவரிடமிருந்து மிகுதியானவற்றைக் கற்க வேண்டும்.

குறள் 725:
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
உரை:
கற்றவேண்டிய தர்க்க நூல்களைக் கற்க அவையஞ்சாது
மாற்றுக் கருத்தைச் சொல்லும் பொருட்டு.

குறள் 726:
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
உரை:
வாளோடு வீரமில்லாதவர்க்கு என்ன தொடர்பு? நூலோடு
நுண்ணறிவுள்ள அவையஞ்சுபவர்க்கு என்ன தொடர்பு?

குறள் 727:
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
உரை:
போர்க்களத்தில் கோழையின் கை வாளானது அவையில்
அஞ்சும் ஒருவன் கற்ற நூல் போலாகும்.

குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
உரை:
பலவற்றைக் கற்றும் பயனில்லாதவர் நல்லவற்றை
நன்கு மனம் விரும்பச் சொல்ல முடியாதார்.

குறள் 729:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
உரை:
கல்லாதவரை விட அற்பமானவர்கள் கற்றிருந்தும்
நல்ல அறிஞர் அவைக்கு அஞ்சுபவர்.

குறள் 730:
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
உரை:
இருந்தாலும் இல்லாதவர்க்கு ஒப்பாவர் அவையஞ்சி
கற்றவற்றை மனம் விரும்பச் சொல்லாதவர்.
Related Posts Plugin for WordPress, Blogger...