April 23, 2014

இன்று உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 2014. இன்று உலக புத்தக தினம். 1955-ல் முதல் உலக புத்தக தினத்தை யுனெஸ்கோ ஆரம்பித்து வைத்தது. புத்தகங்களைக் கொண்டாடவும், எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், புத்தகம் வாசிப்பின் அருமையை அறியப்படுத்தவும் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இன்று மாபெரும் நாடக இலக்கிய கர்த்தாவான ஸேக்ஸ்பியரின் நினைவு தினமும் கூட. 

புத்தக வாசிப்பை நேசிப்பாகக் கொண்ட வாசகர்களின் உற்சாகத் திருநாள். மனிதனை மாற்றும் ஆற்றல் கொண்டவை புத்தகங்கள்தான் என்பதை பறைசாற்றும் நாள். வாசிப்பின் சுகத்தை உணரவைக்கும் நாள். புத்தகம் என்பவை உயிரற்ற ஜடப்பொருள் அல்ல. மாறாக அவைகள் நம் தோழர்கள், உற்ற நண்பர்கள் என்பதை விளங்கச்செய்யும் நாள்.

வாசகர்கள் அனைவரும் இன்றைய தினத்தைக் கொண்டாட வேண்டும். புத்தகங்களை வாசிக்கவும் நேசிக்கவும் வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் என் இனிய உலக புத்தக தின வாழ்த்துகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...