கவிதை: காலம்


சில நேரம்
வேகமாக ஓடுகிறது
சில நேரம்
மெதுவாக நடக்கிறது

பிடித்ததைச் செய்தால்
விரைகிறது
பிடிக்காததைச் செய்தால்
நகர்கிறது

மகிழ்ச்சியில்
குதித்து ஓடுகிறது
துக்கத்தில்
தத்திதத்தி நடக்கிறது

காலம் எப்போதும்
நிற்பதில்லை
நடப்பதில்லை
பறப்பதுமில்லை
சூட்சுமம் காலத்தில்
இல்லை

மாறாக
வாழும் எல்லா நேரமும்
மனதுக்கு
பிடித்திருந்தால்
பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே கூட
ஓர் நாள்தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...