2014 திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள்

கடந்த 31-ம் தேதி 11-வது திருப்பூர் புத்தகத் திருவிழா ஆரம்பித்தது. ஜனவரி 9-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. நான் வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்த கடலோடி, மாய விளக்கு, நிழல்கள், சட்டி சுட்டது, கிருஷ்ணப் பருந்து ஆகிய ஐந்து புத்தகங்கள் கிடைத்தது மகிழ்ச்சியளித்தது. வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:
 1. கடலோடி -நரசய்யா (அலர்மேல்மங்கை)
 2. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் –எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை)
 3. மாய விளக்கு –இங்மர் பெர்க்மன் (நிழல்)
 4. நிழல்கள் –நகுலன் (நற்றிணை)
 5. விலங்குப் பண்ணை –ஜார்ஜ் ஆர்வெல் –க.நா.சு. (நற்றிணை)
 6. மாலு –சுப்ரபாரதி மணியன் (உயிர்மை)
 7. சட்டி சுட்டது –ஆர்.ஷண்முகசுந்தரம் (நற்றிணை)
 8. இன்று –அசோகமித்திரன் (நற்றிணை)
 9. கிருஷ்ணப் பருந்து –ஆ.மாதவன் (தமிழினி)
 10. வெல்லிங்டன் –சுகுமாரன் (காலச்சுவடு)
 11. நிமித்தம் –எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை)
 12. தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி –சில்வியா பிளாத் (காலச்சுவடு)
இதைத் தவிர வாங்க விரும்பிய சி.மோகனின் விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம், ஆல்பெர் காம்யுவின் முதல் மனிதன், ஜெயமோகனின் நினைவின் நதியில் ஆகிய புத்தகங்கள் இங்கே கிடைக்கவில்லை. மேலும் எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கிய பேருரைகள் வாங்கவும் திட்டமிட்டுள்ளேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...