January 20, 2014

கவிதை: சமத்துவம்





தோளில் தொங்கிய
துண்டை
இடுப்பில் மடித்துக்கட்டி
தன் எதிரே நின்றவரை
பவ்வியமாய்க் கும்பிட்டு
திரும்பியவன்
தன் வீட்டில்
தன்னை
கும்பிட்டவர்களைக் கண்டு
முகம் சுழித்து
மனைவியிடம் கத்தினான்:
‘கண்ட கண்ட
கழுதகள
வீட்டுக்குள்ளே
விடாதேன்னு
எத்தன தரம் சொல்லுறது‘
Related Posts Plugin for WordPress, Blogger...