January 31, 2014

மகாத்மாவின் சொற்களை நினைவு கொள்வோம்

பிரார்த்தனை என்பது யாசிப்பல்ல
மாறாக அது ஆன்மாவின் வேட்கை.
தனது தவறுகளை ஒருவர்
தினந்தோறும் ஒப்புக்கொள்வது.
மனமற்று
வெளிப்படும் சொற்களைவிட
சொற்களற்ற மனப்பூர்வமான வேண்டுதல் மேலானது.

கண்ணுக்குக் கண் என்பது
இறுதியில்
இந்த உலகம் முழுதும்
குருடர்களை நிரப்பிவிடும்.

கோழைகள் ஒருபோதும்
மன்னிக்க முடியாது
மன்னிப்பு என்பது
மனோதிடத்தின் வெளிப்பாடு.

நீ
என்ன நினைக்கிறாய்
என்ன சொல்கிறாய்
எதை ஒப்புக்கொண்டு செய்கிறாய்
என்பதிலேயே
மகிழ்ச்சி இருக்கிறது.

முதலில் அவர்கள்
உன்னை அலட்சியப்படுத்துவார்கள்
பிறகு
உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்
அதன் பிறகு
உனக்கு எதிராகப் போராடுவார்கள்
அப்போது நீ
வெற்றி பெறுவாய்.

என் அனுமதி இன்றி
என்னை யாரும்
புண்படுத்த முடியாது.

Related Posts Plugin for WordPress, Blogger...