சென்னை புத்தகத் திருவிழாவில் சில பிரபலங்கள் வாங்கிய புத்தகங்கள்

2014 சென்னை புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட அதிமான புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும், அதிகம் பேர் வருகை தந்ததாகவும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சென்னை புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாதவர்களின் ஏக்கத்தை தமிழ் ‘தி இந்து‘  ஓரளவு சரிசெய்தது என்றே சொல்லவேண்டும். புத்தகத் திருவிழாவின் விரிவான செய்திகளைத் தாங்கிவந்த பத்திரிக்கையாக அது திகழ்ந்தது. பல பிரபலங்களை பேட்டி கண்டு அவர்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டது ஒரு சிறப்பு. பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என அவற்றைத் தொகுத்து பதிவிடுகிறேன்.

சிவகாமி ஐ.ஏ.எஸ்:
1. கேப்டன் எஸ். கலியபெருமாளின் ‘தலித் சுதந்திரப் போராட்டம்’
2. கிஷோர் சாந்தாபாய் காலேயின் ‘குலாத்தி’
3. ஸர்மிளா செய்யித்தின் ‘உம்மத்’
4. புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘மீசான் கற்கள்’
5. லெ கிளேசியோவின் ‘குற்ற விசாரணை’

ஒளிப்பதிவாளர் செழியன்:
1. வை. மு. கோ-வின் ‘கம்பராமாயணம்’
2. ஆல்பெர் காம்யுவின் ‘முதல் மனிதன்’
3. ‘ஸ்டீவன் ஹாக்கிங் வாழ்வும் பணியும்’
4. சி. மோகனின் ‘விந்தை மனிதனின் உருவச் சித்திரம்’
5. சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’

இயக்குனர் நடிகர் சசிகுமார்:
1. மருத்துவர் கு.சிவராமனின் ‘ஆறாம் திணை’
2. கவிஞர் கார்த்திக் நேத்தாவின் ‘தவளைக்கல் சிறுமி’
3. பரத்வாஜ் ரங்கனின் ‘மணிரத்னம்’
4. தாரிக் அலியின் ‘அடிப்படைவாதங்களின் மோதல்’

இயக்குனர் வெற்றிமாறன்:
1. சி.மோகனின் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’
2. சி.ஜெ.ராஜ்குமாரின் ‘பிக்சல்’
3. ஆல்பெர் காம்யுவின் ‘முதல் மனிதன்’
4. வெ.ஸ்ரீராமின் ‘புதிய அலை இயக்குநர்கள்’
5. தாஹர் பென் ஜிலோவனோவின் ‘நிழலற்ற பெருவளி’

தமிழச்சி தங்கபாண்டியன்:
1. சி.மோகனின் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’
2. செழியனின் ‘பத்து இசைப் புத்தகங்கள்’
3. கே. சதாசிவத்தின் ‘தமிழகத்து தேவதாசிகள்’
4. வா. மணிகண்டனின் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’
5. ட்ராட்ஸ்கி மருதுவின் ‘காலத்தின் திரைச்சீலை’

'நீயா நானா' ஆண்டனி:
1. சு.வேணுகோபாலின் ‘கூந்தப்பனை’
2. குமார செல்வாவின் ‘குன்னிமுத்து’
3. சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’
4. உமர் ஃபாருக்கின் ‘வீட்டுக்கு ஒரு மருத்துவர்’
5. ‘ஆதவன் சிறு கதைகள்’
6. கார்த்திக் நேத்தாவின் ‘தவளைக்கல் சிறுமி’

அசோகமித்திரன்:
1. சார்வாகன் கதைகள்
2. சா.தேவதாஸின் ‘எமிலிக்காக ஒரு ரோஜா’
3. அரவிந்தனின் ‘கேளிக்கை மனிதர்கள்’
4. அழகிய சிங்கரின் ‘ரோஜா நிறச் சட்டை’
5. சா.கந்தசாமியின் ‘மழை நாட்கள்’

மருத்துவர் கு.சிவராமன்:
1. இமையத்தின் ‘செடல்’
2. ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’
3. தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’
4. தமிழச்சி தங்கபாண்டியனின் ‘வனப்பேச்சி’
5. ஜான் பெல்லமி பாஸ்டரின் ‘சூழலியல் புரட்சி’

பத்திரிக்கையாளர் எஸ். சிவக்குமார்:
1. கோ. தெய்வநாயகத்தின் ‘சிற்ப சாஸ்திரச் செய்தி அடைவு’
2. ம.தொ. ஸ்ரீநிவாஸ், கோ.பரமசிவம், தி.புஷ்பகலா கைவண்ணத்தில் உருவான ‘திருப்போரூர் மற்றும் வடக்குப்பட்டு 18ம் நூற்றாண்டு ஆவணங்கள்’
3. மு.கு. ஜகநாதராஜாவின் ‘தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள்’
4. புலவர் செ. இராசுவின் ‘சேதுபதி செப்பேடுகள்’
5. டாக்டர் தெ. ஞானசுந்தரத்தின் ‘பெரிய திருமொழி உரையும் தமிழாக்கமும்’

நீதிபதி கே. சந்தரு:
1. பெருமாள்முருகனின் ‘நானும் சாதியும்’
2. பழ. அதியமானின் ‘சேரன்மாதேவி குருகுல சர்ச்சை’
3. ஜோ டி குரூஸின் ‘கொற்கை’
4. த.செ.ஞானவேலின் ‘ஒற்றையடிப் பாதை’, ‘திருப்புமுனை’
Related Posts Plugin for WordPress, Blogger...