கவிதை: தேடல்

நான்
செல்ல வேண்டிய திசையை
பயணிக்க வேண்டிய பாதையை
அடைய வேண்டிய இலக்கை
நிர்ணயித்தவர்கள் பலர்

இப்பொது நான் வந்துசேர்ந்த
இடம் நான் விருப்பப்பட்டதல்ல

இதுவரை
என் முகத்தை மறைத்து
அடுத்தவரின் முகத்தையே
பிரதிபலித்து வந்தேன் நான்

அவர்கள் காட்டிய திசையை பாதையை இலக்கை
அடைந்துவிட்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சி

நானோ
விசனப்பட்டு
துக்கப்பட்டு
என்னை நானே
தேட ஆயத்தமானேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...