July 9, 2013

அசோகமித்திரன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

1984-ல் நேஷனல் புக் டிரஸ்ட் புதிய தமிழ்ச் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது. தொகுப்பாசிரியராக இருந்து கதைகளைத் தேர்ந்ததெடுத்தவர் அசோகமித்திரன். அவர் தோ்வுசெய்த கதைகளின் பட்டியல்:
  1. மருமகள் வாக்கு –கிருஷ்ணன் நம்பி
  2. மிலேச்சன் –அம்பை
  3. நிழல்கள் –ஆதவன்
  4. எஸ்தர் –வண்ணநிலவன்
  5. உத்தியோக ரேகை –சார்வாகன
  6. தொலைவு –இந்திரா பார்த்தசாரதி
  7. சண்டையும் சமாதானமும் –நீல.பத்மநாபன்
  8. நாயனம் –ஆ.மாதவன்
  9. நகரம் –சுஜாதா
  10. ஒரு வருடம் சென்றது –சா.கந்தசாமி
  11. ஒரு இந்நாட்டு மன்னர் –நாஞ்சில் நாடன்
  12. தனுமை –வண்ணதாசன்
  13. நாற்காலி –கி.ராஜநாராயணன்
  14. அந்நியர்கள் –ஆர்.சூடாமணி
  15. பகல் உறவுகள் –ஜெயந்தன்
  16. காலமும் ஐந்து குழந்தைகளும் –அசோகமித்திரன்
1960-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளும், வளமூட்டிய படைப்புகளும் கொண்ட தொகுப்பாக இக்கதைகளைச் சொல்கிறார் அவர். இவற்றின் தேர்வுக்கான காரணத்தை இப்படிச் சொல்கிறார்:


1967-ல் நகுலன் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட குருஷேத்திரம் தொகுப்பை முக்கியமான தொகுப்பாகக் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். சிறந்த சிறுகதைகள் பல வெளியாக சிறு பத்திரிக்கைகளே முக்கிய பங்கு வகித்துள்ளன என்றும் சொல்லும் அவர் தான் தேர்ந்த கதைகளைப் பற்றி கீழ்வரும் குறிப்புகளோடு கட்டுரையை நிறைவு செய்கிறார்:


அவர் சொன்னது போல், இன்றும் தமிழின் முக்கியமான சிறுகதைகளாக அவர் தேர்ந்தெடுத்த இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் இருக்கின்றன. இக்கதைகளைப் படிப்பதன் மூலம் ஒரு நிறைவான இலக்கிய அனுபவத்தை நாம் பெறமுடியும் என்பதில் சந்தேகமில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...