July 7, 2013

குடும்பப் புத்தி –அசோகமி்த்திரன்

அசோகமித்திரனின் குடும்ப புத்தி கதை காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளிடையே எற்படும் சண்டையைச் சொல்கிறது. காதலிக்கும் போது நெருக்கமாக, அந்நியோன்யமாக உணர்ந்த அவர்கள் திருமணத்திற்குப் பின் தங்களிடையே கருத்துவேறுபாடு வந்துவிட்டதாக உணர்கிறார்கள். தன் மனைவி தனக்கு ஏற்றவள் இல்லையோ என்ற சந்தேகம் அவனுள் எழுகிறது. தன் அம்மாவிடம் அது பற்றி கேட்கிறான்.1 அவனது அம்மாவின் மேற்கண்ட பதில் நம்முள் பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. அதன் விளைவாக காதல் திருமணம் குறித்து சில சிந்தனைகளை நாம் ஆராயலாம்.

காதல் திருமணத்தைவிட நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பிரிவும், விவாகரத்தும் குறைவுதான் என்று சொல்லவேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செய்த காதல் திருமணங்கள் ஏன் இவ்வாறு ஆகவேண்டும்? அதும் திருமணமான நான்கு அல்லது ஐந்து வருடங்களிலேயே இவ்வாறு நேர்ந்துவிடுகிறது. முன்பின் தெரியாத நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அவ்வளவு விரைவாக இது நிகழ்வதில்லை.

இதற்கான காரணங்களை ஆராயந்தால், சற்றே வித்தியாசமான பதிலை நாம் பெறலாம். காதல் திருமணங்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள் என்பது சரிதான். ஆனால் காதலிக்கும் இருவருமே மற்றவரிடத்து தன் தேவையற்ற குணங்களை மறைத்து வைத்துக்கொண்டு தன்னை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் இருவரின் குணாதிசயங்களும் பொருந்திப் போவதான ஒரு போலியான தோற்றம் ஏற்படுகிறது. இவை திருமணத்திற்கு பிறகு சிதறத் தொடங்கிவிடுகின்றன.

அவற்றையெல்லாம்விட முக்கிய காரணம் என்னவென்றால், காதலிக்கும் காலகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்டுவிட்ட புரிதலே, திருமணத்திற்குப் பின் அவர்களிடையெ பிரிவு ஏற்பட காரணமாகிவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படத் தொடங்கும் புரிதலின் காலம் திருமணத்திற்குப் பின் அவர்களுக்குக் கிட்டுவதில்லை. எனவே அடுத்த கட்டமான பிரிவை நோக்கி வேகமாக நகர்ந்துவிடுகிறார்கள்.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதிலேயே காலம் கடந்துவிடுகிறது. அதற்குள் அவர்களின் உடல் மூலமான பிணைப்பு அவர்களைப் பிரிக்க இயலாதவாறு பந்தப்படுத்திவிடுகிறது. எனவே இருவருக்குமிடையே ஏற்படும் வேற்றுமைகளை அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிடுகிறது. ஆக, அவர்களுக்குள் பிரிவு காலம் தாழ்த்தி ஏற்படுகிறது அல்லது ஏற்படாமலேயே போகிறது.

அவனது அம்மாவின் மேற்கண்ட பதிலுடன் கதையை முடித்திருக்கலாம். கதை கச்சிதமாகவே இருந்திருக்கும். ஆனால் அசோகமித்திரன் மேற்கொண்டு மூன்று வாக்கியங்களைச் சேர்த்து கதையை முடிக்கிறார். ஒரு விதத்தில் இது தேவையில்லை என்றாலும், அசோகமித்திரன் அப்படி தேவையில்லாதவற்றை தன் கதையில் சேர்ப்பவரல்ல. அப்படிச் சேர்ப்பதன் மூலம் பொருந்தாத திருமணம் செய்துகொண்டு, குடும்பப் புத்தியை விமர்சித்ததினால் மனதில் ஏற்பட்டுவிட்ட வேதனையை நம் மனதில் பதியுமாறு செய்கிறார்.2இது அசோகமித்திரனின் முக்கியமான கதையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் நல்ல கதை. அவர் கதைகளைப்  படிப்பதில் அலாதியான ஒரு இன்பம் இருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...