July 27, 2013

தற்போது வாங்கிய புத்தகங்கள் பட்டியல்

அடுத்த மாதம் ஈரோட்டில் புத்தகத் திருவிழா வருகிறது. புத்தகக் கண்காட்சி என்றில்லாது எப்போதும் புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருப்பது என் இயல்பு. என்ன கண்காட்சியில் மொத்தமாக பிடித்தவைகளை வாங்கிவிடலாம். சுவாசிக்காமல் ஜீவிக்க முடியாதது போல் புத்தகங்களை வாங்காமல் இருக்க முடியவில்லை. புத்தகங்களே சுவாசம் என்றாகிவிட்டது. அவ்வப்போது வாங்கிய புத்தகங்கள் பல சேர்ந்துவிட்டன. அவற்றை படிக்கும் காலம்தான் போதவில்லை.
  1. கோபிகிருஷ்ணன் படைப்புகள்-நற்றினை
  2. அசுரகணம்-க.நா.சு.-நற்றிணை
  3. வாக்குமூலம்-நகுலன்-நற்றிணை
  4. தாசன் கடைவழியாக அவர் செல்வதில்லை-வண்ணநிலவன்-நற்றிணை
  5. ரெயினீஸ் அய்யர் தெரு-வண்ணநிலவன்-நற்றிணை
  6. பின் நகர்ந்த காலம்-வண்ணநிலவன்-நற்றிணை
  7. தனிமையின் நூறு ஆண்டுகள்-காப்ரியேல் கார்சியே மார்க்கஸ்-காலச்சுவடு
  8. கரிசல் கதைகள்-தொகுப்பு கி.ராஜநாராயணன்-அன்னம்
  9. சோஃபியின் உலகம்-யொஸ்டைன் கார்டர்-காலச்சுவடு
  10. அறம்-ஜெயமோகன்-வம்சி புக்ஸ்
  11. மௌனியின் படைப்புகள்-காலச்சுவடு
  12. ந.பிச்சமூர்த்தியின் கலை-மரபும் மனித நேயமும்-சுந்தர ராமசாமி-காலச்சுவடு
Related Posts Plugin for WordPress, Blogger...