May 20, 2013

ராகு காலம் –அ.முத்துலிங்கம்

மனிதனுக்கு தான் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. தான் தொட்டது அனைத்தும் துலங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில் தவறில்லை. ஆனால் செய்யும் காரியங்கள் தவறாகிவிடுமோ என்ற ஐயம் அவனை பல விசயங்களில் அலைக்கழித்து வருகிறது. கால நேரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவனிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. தன் காரியங்களில் விளைவை அதைச் செய்யும்போதே தீர்மானித்துவிட வேண்டும் என்பது அவனது தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் அதை யோசனை செய்யும் நிலையில் அவன் இல்லை.

எனவே ஜோசியமும், கால நேரமும் அவனை வெகுவாக ஆட்டிப்படைக்கிறது. தான் என்னவேண்டுமானாலும் தவறுதலாகச் செய்யினும் காலமும் நேரமும் தன்னைக் காப்பாற்றவேண்டும் என அவன் நினைப்பது விசித்திரமாக இருக்கிறது. தன்னை தன் காரியங்களை நடத்திச்செல்ல இப்படி ஏதாகினும் ஒரு பற்றுதல் அவனுக்கு அவசியமாகிறது. உண்மையில் அவற்றால் எந்த அளவிற்கு தான் நினைத்தது நடந்துள்ளது, அல்லது எந்த அளவிற்கு நினைத்தது நடக்காமல் போயிருக்கிறது என்பதை சிந்திக்கும் நிலையில் அவன் இல்லை.

உலகம் முழுமைக்கும் இந்த எண்ணம் அவரவர் காலாச்சாரத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. மாறபடுகிறது என்பதோடல்லாமல், பல நாட்கள் பழகிய அவற்றில் நம்பிக்கை இழந்து, அடுத்த காலச்சாரத்தின் மீதும் அவர்கள் நம்பிக்கைகள் மீதும் பற்றுதல் ஏற்படுகிறது. நம் கடவுள் மீது நம்பிக்கை இழந்து அடுத்த கடவுள் மீது வரும் நம்பிக்கை போன்றதுதான் இது.

அப்படியான ஒரு அயல்நாட்டவன் ஒருவன் நம் காலநேரம், ராகு காலம் பற்றியவற்றில் நம்பிக்கை கொண்டு பின்பற்றுவதால் ஏற்படும் விளைவை தனக்கேயான நகைச்சுவை மிளிர ராகுகாலம் கதையில் விவரிக்கிறார் அ.முத்துலிங்கம்.

Related Posts Plugin for WordPress, Blogger...