March 7, 2013

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் படைப்புகள்

1955-ல் முதன் முதலாக ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ் இன்பம் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டது. அன்று தொட்டு இன்று வரை பலரின் படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டாலும், காலம் தாழ்த்தி வழங்கப் படுவதாகவும், இலக்கியத் தரமில்லாதவற்றுக்கும் வழங்கப்படுவதாக சாகித்ய அதாதமி மீது குற்றச் சாற்றுகள் உண்டு. எனவே தீவிர இலக்கியப் படைப்பாளிகள் இவ்விருது குறித்து கவலைப்படுவதில்லை. பிற மொழிகளைவிட தமிழில் இக்குறைபாடுகள் அதிகமும் இருப்பது உண்மையில் கவலைப் படக்கூடிய விசயம்தான். ஏனெனில் விருது பெற்ற படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும்போது மற்ற மொழி வாசிப்போர்கள் தமிழ் படைப்புகளின் மீது தரக்குறைவான ஒரு மதிப்பீட்டை வந்தடையும் சாத்தியம் நிரம்ப உள்ளது.

இது குறித்து பலரும் தங்கள் கவலைகளை தெரிவித்திருந்தும் கூட சாகித்ய அகாதமியும், படைப்புகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பிலுள்ளவர்களும் அதுபற்றி கிஞ்சித்தும் கவலை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். போட்டியும் பொறாமையும் குழு மனப்பான்மையும் தமிழின் சாகத்திய அகாதமி விருதை கேலிக்குறியதாக ஆக்கி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த காலங்களில் விருது வழங்கப்பட்ட படைப்புகளின் பட்டியலைப் பார்த்தாலே எத்தகைய படைப்புகளை இவர்கள் தேர்ந்துள்ளார்கள் என்பது பற்றி நாம் அறியமுடியும். இதில் பல படைப்புகள் விதிவிலக்காக இடம் பிடித்திருப்பது தமிழின் அதிர்ஷ்டமே.
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளின் பட்டியல்:



  • 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
  • 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
  • 1957 - (விருது வழங்கப்பட வில்லை)
  • 1958-சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை)-சி. ராஜகோபாலச்சாரி
  • 1959 - (விருது வழங்கப்பட வில்லை)
  • 1960 - (விருது வழங்கப்பட வில்லை)
  • 1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
  • 1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
  • 1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
  • 1964 - (விருது வழங்கப்பட வில்லை)
  • 1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
  • 1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
  • 1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
  • 1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்
  • 1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
  • 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
  • 1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
  • 1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
  • 1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
  • 1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு
  • 1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்
  • 1976 - (விருது வழங்கப்பட வில்லை)
  • 1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
  • 1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
  • 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
  • 1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
  • 1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
  • 1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
  • 1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
  • 1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி
  • 1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்
  • 1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
  • 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
  • 1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி
  • 1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்
  • 1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
  • 1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
  • 1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
  • 1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
  • 1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
  • 1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
  • 1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
  • 1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
  • 1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - ச. கந்தசாமி
  • 1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
  • 2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
  • 2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
  • 2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
  • 2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
  • 2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
  • 2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
  • 2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா
  • 2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
  • 2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
  • 2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு
  • 2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
  • 2011 - காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்
  • 2012 - தோல் (நாவல்) - டி. செல்வராஜ்
  • Related Posts Plugin for WordPress, Blogger...