க.நா.சு எழுதிய புத்தகங்கள் பட்டியல்

க.நா.சு பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போது காலச்சுவடு இதழ் 144-ல் க.நா.சு. ஓர் எழுத்தியக்கம் எனும் தலைப்பில் பழ.அதியமான் எழுதிய கட்டுரை கண்ணில் பட்டது. அதில் க.நா.சு. எழுதியுள்ள புத்தகங்களைக் கட்டுரையாசிரியர் பட்டியலிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் எவ்வளவு நூல்களை எழுதியிருக்கிறார் மனிதர் என்ற வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்பைப் புத்தக அலமாரி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

க.நா.சுவின் புத்தகப் பட்டியலைத் தயாரிக்க முனைந்த எனக்கு அது அவ்வளவு சுலபமல்ல என்று உடனே தெரிந்துவிட்டது. குறிப்பிட்ட ஒரு பதிப்பகம் அல்லது சில பதிப்பகங்களில் மட்டும் அவரது நூல்கள் வெளியாகவில்லை. வெளியீட்டில் எந்த முறைமையையும் காண முடியவில்லை. எந்த ஒரு நூலகத்திலும் தனி நபரிடத்திலும் உறவினர்கள் உட்பட அவரது நூல்கள் முழுமையாக எங்கும் இல்லை. சு. ரா. நினைவு நூலகம் நாகர்கோவில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னை, பெரம்பூர் நண்பர் லட்சுமிபதி, மற்ற நண்பர்களின் சிறுசேகரங்கள் ஆகியவற்றிலிருந்து இப்பட்டியல் உருவாகியிருக்கிறது. புத்தக விளம்பரங்கள், மதிப்புரைகள், போன்றவையும் பயன்பட்டன. இது முன்பட்டியல், முழுமையாக்கப்பட வேண்டியது.
நாவல்
 1. அசுரகணம் (1959)
 2. அவதூதர் (1988)
 3. அவரவர் பாடு (1963)
 4. ஆட்கொல்லி (1957)
 5. ஆயுள் தண்டனை
 6. ஏழுபேர் (1946)
 7. ஏழுமலை
 8. ஒரு நாள் (1946)
 9. கந்தர்வ லோகத்தில் கொலை
 10. கருகாத மொட்டு (1966)
 11. கோதை சிரித்தாள் (1986)
 12. கோபுர வாசல்
 13. சக்தி விலாசம்
 14. சத்யாகிரஹி
 15. சமூகச் சித்திரம் (1953)
 16. சர்மாவின் உயில் (1948)
 17. தந்தையும் மகளும்
 18. தாமஸ் வந்தார் (1988)
 19. நடுத்தெரு
 20. நளினி (1959)
 21. நான்கு நாவல்கள் (1955)
 22. பசி (1943)
 23. பட்டணத்து வாழ்வு (1961)
 24. பித்தப்பூ (1987)
 25. புழுதித் தேர்
 26. பெரிய மனிதன் (1959)
 27. பொய்த்தேவு (1966)
 28. மாதவி (1959)
 29. மூன்று நாவல்கள் (1985)
 30. வாழ்ந்தவர் கெட்டால் (1951)
 31. வாழ்வும் தாழ்வும்
அச்சில் வராதவை:
திருவாலங்காடு, மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர்
சிறுகதை
 1. அழகி முதலிய கதைகள் (1944)
 2. ஆடரங்கு (1955)
 3. இரண்டு பெண்கள் (1965)
 4. க.நா.சு கதைகள் மி, மிமி, மிமிமி (1988)
 5. சாவித்திரி சிறுகதை
 6. சுந்தா பாட்டி சொன்னாள்
 7. தீ! தீ கதைகள்
 8. தெய்வ ஜனனம் (1943)
 9. நாயக்கர் தஞ்சை கதைகள்
 10. பதினேழு கதைகள்
 11. மணிக்கூண்டு (1961)
 12. மராட்டியர் தஞ்சை கதைகள்
கவிதை
 1. க.நா.சு கவிதைகள் (1986)
 2. புதுக் கவிதைகள் (1989)
 3. மயன் கவிதைகள் (1977)
நாடகம்
 1. ஊதாரி (1961)
 2. ஏழு நாடகங்கள் (1944)
 3. கலியாணி
 4. நல்லவர் (1957)
 5. பேரன்பு, கவிதைநாடகம்
 6. மஞ்சளும் நீலமும்
 7. வாழாவெட்டி
விமர்சனக் கட்டுரை
 1. இந்திய இலக்கியம் (1984)
 2. இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)
 3. இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)
 4. இலக்கிய விசாரம் (ஒரு சம்பாஷணை) (1959)
 5. இலக்கியச் சாதனையாளர்கள் (1985)
 6. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)
 7. உலக இலக்கியம் (1989)
 8. உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)
 9. கலை நுட்பங்கள் (1988)
 10. கவி ரவீந்திரநாத தாகுர் (1941)
 11. சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)
 12. தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)
 13. படித்திருக்கிறீர்களா? (1957)
 14. புகழ்பெற்ற நாவல்கள் (1955) (இரண்டு தொகுதிகள்)
 15. புதுமையும் பித்தமும் (2006)
 16. மனித குல சிந்தனைகள் (1966)
 17. மனித சிந்தனை வளம் (1988)
 18. முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)
 19. விமரிசனக் கலை (1959)
மொழிபெயர்ப்பு
 1. அன்பு வழி - ஸ்வீடிஷ் - பேர்லாகர் க்விஸட் (1956)
 2. ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் சுயசரிதம் (1958)
 3. உலகின் சிறந்த நாவல்கள் (1959)
 4. எளிய வாழ்க்கை - ஹென்றி டேவிட் தேபரோ (1956)
 5. ஐரோப்பியச் சிறுகதைகள் (1987)
 6. குடியானவர்கள் - போலந்து
 7. தாசியும் தபசியும் - பிரெஞ்சு
 8. நல்ல நிலம் - கெரோல்
 9. நிலவளம் - நார்வேஜியன் - நட்ஹாம்சன்
 10. மதகுரு - போலந்து
 11. மிருகங்கள் பண்ணை - ஜேம்ஸ் ஆர்வெல் - (1956)
 12. விருந்தாளி - பிரெஞ்சு- ஆல்பெர் காம்யூ
ஆங்கில நூல்
 1. Contemporary Indian Short Stories (Ed.) (1977)
 2. Contemporary Tamil Short Stories (1978)
 3. Generations (Novel) - Neela Padmanaban (1972)
 4. Movements for Literature
 5. Sons of the Sun (Novel) - Sa.Kandasamy (2007)
 6. The Anklet Story (1977)
 7. The Catholic Community in India (1970)
 8. Thiruvalluvar and His Thirukkural (1989)
 9. பாரதியின் காட்சி (1989)
Related Posts Plugin for WordPress, Blogger...