ஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்கள் பட்டியல்

ஜெயமோகன் தன் நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலில் முக்கிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார். அவரது அந்த புத்தகம் எல்லோரும் வாசிக்கவேண்டியது என கருதுகிறேன். இலக்கியத்தை அணுகும் முறை பற்றியும், பல்வேறு முக்கிய படைப்பாளிகளின் படைப்புகள் குறித்தும் விவாதிக்கிறார் ஜெயமோகன். புத்தக அலமாரியில் அவரது பட்டியல் ஒரு கையேடு போல் அமையும் என்று கருதி இங்கே தருகிறேன். மொத்தம் 74 படைப்பாளிகளின் 161 நாவல்களை விமரிசகனின் சிபாரிசு என்று கொடுத்திருக்கிறார். அவரது பொழுதுபோக்கு நாவல்களின் பட்டியலை நான் கணக்கில் சேர்க்கவில்லை.

படைப்பாளிகள்படைப்புகள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை1. பிரதாப முதலியார் சரித்திரம்
பி.ஆர்.ராஜம் அய்யர்1. கமலாம்பாள் சரித்திரம்
மாதவையா1. பத்மாவதி சரித்திரம்
கு.ப.ராஜகோபாலன்1. வேரோட்டம்
ஆர்.சண்முக சுந்தரம்1. நாகம்மாள்
2. சட்டி சுட்டது
ந.சிதம்பர சுப்ரமண்யன்1. இதயநாதம்
அநுத்தமா1. கேட்ட வரம்
எம்.எஸ். கல்யாணசுந்தரம்1. இருபது வருடங்கள்
2. பகல் கனவு
க.நா.சுப்ரமணியம்1. பொய்த்தேவு
2. ஒரு நாள்
3. வாழ்ந்தவர் கெட்டால்
சி.சு.செல்லப்பா1. வாடிவாசல்
2. ஜீவனாம்சம்
லா.சா.ராமாமிருதம்1. அபிதா
2. புத்ர
எம்.வி.வெங்கட்ராம்1. வேள்வித் தீ
2. நித்யகன்னி
3. காதுகள்
கரிச்சான் குஞ்சு1. பசித்த மானிடம்
ரகுநாதன்1. பஞ்சும் பசியும்
தி.ஜானகிராமன்1. மோகமுள்
2. அம்மா வந்தாள்
3. மலர் மஞ்சம்
4. செம்பருத்தி
5. அன்பே ஆரமுதே
6. மரப்பசு
சங்கர்ராம்1. மண்ணாசை
மு.தளையசிங்கம்1. ஒரு தனி வீடு
கிருத்திகா1. வாசவேஸ்வரம்
2. தர்மஷேத்ரே
3.  புகை நடுவில்
4. நேற்றிருந்தோம்
இந்திரா பார்த்தசாரதி1. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
2. தந்திர பூமி
3. சுதந்திர பூமி
4. குருதிப்புனல்
5.  வேதபுரத்து வியாபாரிகள்
6. கிருஷ்ணா கிருஷ்ணா
7. வேரோட்டம்
ராஜம் கிருஷ்ணன்1. குறிஞ்சித்தேன்
2. வளைக்கரம்
3. பாதையில் படிந்த அடிகள்
ஜெயகாந்தன்1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
2. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
3. பாரிஸீக்குப்போ
4. சில நேரங்களில் சில மனிதர்கள்
5. சுந்தர காண்டம்
6. கங்கை எங்கே போகிறாள்?
கு.சின்னப்ப பாரதி1. தாகம்
2. சங்கம்
டி.செல்வராஜ்1. தேநீர்
2. மலரும் சருகும்
ப.சிங்காரம்1. புயலிலே ஒரு தோணி
2. கடலுக்கு அப்பால்
நகுலன்1. நினைவுப் பாதை
2. நாய்கள்
3. வாக்குமூலம்
4. நவீனன் டைரி
சுந்தர ராமசாமி1. ஒரு புளிய மரத்தின் கதை
2. ஜே.ஜே.சில குறிப்புகள்
3. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
கி.ராஜநாராயணன்1. கோபல்ல கிராமம்
2. கோபல்லபுரத்து மக்கள்
சா.கந்தசாமி1. சாயாவனம்
2. சூரியவம்சம்
3. தொலைந்து போனவர்கள்
4. அவன் ஆனது
ஜி.நாகராஜன்1. நாளை மற்றுமொரு நாளே
2. குறத்தி முடுக்கு
அ. பால மனோகரன்1. நிலக்கிளி
ஹெப்சிபா ஜேசுதாசன்1. புத்தம் வீடு
அசோகமித்திரன்1. 18-வது அட்சக்கோடு
2. தண்ணீர்
3. கரைந்த நிழல்கள்
4. மானசரோவர்
நீல.பத்மநாபன்1. தலைமுறைகள்
2. பள்ளிகொண்டபுரம்
3. உறவுகள்
பொன்னீலன்1. கரிசல்
2. புதிய தரிசனங்கள்
ஆ.மாதவன்1. கிருஷ்ணப் பருந்து
2. புனலும் மணலும்
சு.சமுத்திரம்1. சோற்றுப் பட்டாளம்
2. வாடா மல்லி
விட்டல் ராவ்1. போக்கிடம்
2. நதிமூலம்
எஸ்.சம்பத்1. இடைவெளி
தமிழவன்1. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
வண்ணநிலவன்1.கம்பாநதி
2. ரெயினீஸ் அய்யர் தெரு
3. கடல் புரத்தில்
பூமணி1. பிறகு
2. வெக்கை
நாஞ்சில் நாடன்1. தலைகீழ் விகிதங்கள்
2. என்பிலதனை வெயில் காயும்
3. மாமிசப் படைப்பு
4. எட்டுத்திக்கும் மதயானை
5. மிதவை
தோப்பில் முகம்மது மீரான்1. ஒரு கடலோர கிராமத்தின் கதை
2. கூனன் தோப்பு
3. துறைமுகம்
4. சாய்வு நாற்காலி
பிரபஞ்சன்1. மானுடம் வெல்லும்
2. மகாநதி
ஆதவன்1. காகித மலர்கள்
2. என் பெயர் ராமசேஷன்
எஸ். அருள் சுப்ரமணியம்1.அவர்களுக்கு வயது வந்துவிட்டது
பாமா1. கருக்கு
2. சங்கதி
சிவகாமி1. பழையன கழிதலும்
2. ஆனந்தாயி
வேகாந்தன்1. கனவுச்சிறை
வாஸந்தி1. மௌனப் புயல்
2. நிற்க நிழல் வேண்டும்
சி.ஆர்.ரவீந்திரன்1. ஈரம் கசிந்த நிலம்
சூரியகாந்தன்1. மானாவாரி மனிதர்கள்
பாவை சந்திரன்1. நல்ல நிலம்
ஸ்ரீதர கணேசன்1. உப்பு வயல்
பாவண்ணன்1. பாய்மரக் கப்பல்
சுப்ரபாரதிமணியன்1. மற்றும் சிலர்
2. சாயத்திரை
சோ.தர்மன்1.தூர்வை
2. கூகை
ராஜ் கௌதமன்1. சிலுவைராஜ் சரித்திரம்
2. காலச்சுமை
இமையம்1. கோவேறு கழுதைகள்
2. ஆறுமுகம்
3. செடல்
தஞ்சை பிரகாஷ்1. கள்ளம்
2. கரமுண்டார் வீடு
கோணங்கி1. பாழி
2. பிதிரா
ஜெயமோகன்1. விஷ்ணுபுரம்
2. பின்தொடரும் நிழலின் குரல்
3. காடு
4. ஏழாம் உலகம்
5. கன்யாகுமரி
6. கொற்றவை
எஸ்.ராமகிருஷ்ணன்1. உப பாண்டவம்
2. நெடுங்குறுதி
3. உறுபசி
சாரு நிவேதிதா1. எக்சிஸ்டென்ஷலியசமும் பேன்சி பனியனும்
2. ஸீரோ டிகிரி
பிரேம் ரமேஷ்1. புதைக்கப்பட்ட மனிதர்களும் எரிக்கப்பட்ட பிரதிகளும்
2. சொல் என்றொரு சொல்
யுவன் சந்திரசேகர்1. குள்ளச்சித்தன் சரித்திரம்
2. பகடையாட்டம்
பெருமாள்முருகன்1. நிழல் முற்றம்
2. கூளமாதரி
சு.வேணுகோபால்1. நுண்வெளிக் கிரணங்கள்
ஷோபா சக்தி1. கொரில்லா
2. “ம்“
ஜோ.டி.குரூஸ்1. ஆழிசூழ் உலகு
எம்.கோபாலகிருஷ்ணன்1. அம்மன் நெசவு
2. மணல் கடிகை
கண்மணி குணசேகரன்1. அஞ்சலை
2. கோரை
விமல் குழந்தைவேல்1. வெள்ளாவி
பாரததேவி1. நிலாக்கள் தூரதூரமாக
Related Posts Plugin for WordPress, Blogger...