நாவல் படிக்க வேண்டிய அவசியம்

புனைவு என்ற வார்த்தையே நம்மை புனைவுக்குள் இட்டு சென்றுவிடும் வசீகரம் கொண்டது. அந்த வசிகரமே ஒரு படைப்பை வாசிக்க தூண்டுகிறது. வாசிப்பின் ஊடாக வாசகன் பெரும் மேலான அனுபவத்தை தருபவையே படைப்புகள். மனிதனின் எண்ண பரிமாற்றத்திற்கு எத்தனையோ ஊடகங்கள் உள்ளன. அதில் வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வாசிப்பிலும் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல பிரிவுகள் உள்ளன. அவை அனைத்திலும் வசீகரம் கொண்டது நாவல்.

ஒரு நாவலை ஒரு வாசகன் படிக்கவேண்டிய அவசியம் என்ன? யோசிக்க வேண்டிய கேள்வி. வெறும் பொழுது போக்கவா? பொழுதை போக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அப்படியிருக்க நாவலை வாசிக்க வேண்டிய அவசியம் ஏன் எழுகிறது? வாழ்க்கையின் ஊடாக ஒவ்வொரு மனிதனும் பெறும் தனிமனித அனுபங்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டவை. வாழ்கை பிரமாண்டமானது. பன்முக தன்மை கொண்டது. இவ்வாழ்வின் பிரமாண்டத்தையும் பின்னங்களையும் தனி ஒரு மனிதனால் அறிவது கடினம். பிறரின் அனுபங்களின் மூலமே அவனால் அதை அறிய முடியும். அதற்கு வகை செய்வனவே நாவல்கள்.

தமிழில் படிக்கவேண்டிய முக்கியமான நாவல்கள் பல உள்ளன. அவற்றை பற்றி பேசவும் யோசிக்கவும் செய்வோம் வாருங்கள் வாசகர்களே என அன்புடன் அழைக்கிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...